இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவ.27) சிட்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இத்தொடரை இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ஏனெனில் 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில், டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி சாதனைப் படைத்தது.
இதனால் தற்போதைய சுற்றுப்பயணத்திலும் இந்திய அணி இச்சாதனையை நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியும் இத்தொடரைக் முழுவதுமாகக் கைப்பற்ற வேண்டும் என கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இத்தொடரின் ஆட்டவணை, மைதானங்கள், அணி விவரம் குறித்து பார்ப்போம்:
ஒருநாள் தொடருக்கான அட்டவணை மற்றும் அணி விபரம்:
- முதல் ஒருநாள் போட்டி : சிட்னி கிரிக்கெட் மைதானம் - நவம்பர் 27 - காலை 9.10 மணிக்கு.(*இந்திய நேரப்படி)
- இரண்டாவது ஒருநாள் போட்டி : சிட்னி கிரிக்கெட் மைதானம் - நவம்பர் 29 - காலை 9.10 மணிக்கு.
- மூன்றாவது ஒருநாள் போட்டி : கான்பெர்ரா - டிசம்பர் 2 - காலை 9.10 மணிக்கு.
இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, மாயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர், சஞ்சு சாம்சன்.
ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபூசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மத்தேயு வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.
டி20 தொடருக்கான அட்டவணை மற்றும் அணி விபரம்:
- முதலாவது டி20 - கான்பெர்ரா - டிசம்பர் 04 - மதியம் 1.30 மணிக்கு
- இரண்டாவது டி20 - சிட்னி - டிசம்பர் 06 - மதியம் 1.30 மணிக்கு
- மூன்றாவது டி20 - சிட்னி - டிசம்பர் 08 - மதியம் 1.30 மணிக்கு
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹார்டிக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யூஸ்வேந்திர சஹால் ,முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், டி நடராஜன்.
ஆஸ்திரேலியா அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபூசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மத்தேயு வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.
டெஸ்ட் தொடருக்கான அட்டவணை மற்றும் அணி விவரம்:
- முதலாவது டெஸ்ட் (பகலிரவு) - அடிலெய்ட் - டிச17 to டிச 22 - காலை 9.30 மணிக்கு
- இரண்டாவது டெஸ்ட் - மெல்போர்ன் - டிச 26 to டிச 30 - கலை 5 மணிக்கு
- மூன்றாவது டெஸ்ட் - சிட்னி - ஜன 07 to ஜன 11 - காலை 5 மணிக்கு
- நான்காவது டெஸ்ட் - பிரிஸ்பேன் - ஜன 15 to ஜன 19 - காலை 5.30 மணிக்கு
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், சேட்டேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சஹா , ரிஷப் பந்த், ஜாஸ்பிரீத் பும்ரா, முமகது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா அணி: டிம் பெயின் (கேப்டன்), சீன் அபோட், ஜோ பர்ன்ஸ், பாட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லையன், மைக்கேல் நேசர், ஜேம்ஸ் பாட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மத்தேயு வேட், டேவிட் வார்னர்.
இதையும் படிங்க: 'ஸ்லெட்ஜிங்கிற்கு இங்கு இடமில்லை' - ஜஸ்டின் லங்கர்