சர்வதேச ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ளது. இதில், முதலில் மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. ஆடவர் அணிகளுக்கு இடையிலான தொடர் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு உலகக்கோப்பை தொடர் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள் அரங்கில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என உலக உள் அரங்கு கிரிக்கெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
-
The eleventh Indoor Cricket World Cup is coming to Australia in 2020! 🎉 All the deets 👉 https://t.co/T85WVYIEZv pic.twitter.com/Rdqvmh7vzO
— Cricket Australia (@CricketAus) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The eleventh Indoor Cricket World Cup is coming to Australia in 2020! 🎉 All the deets 👉 https://t.co/T85WVYIEZv pic.twitter.com/Rdqvmh7vzO
— Cricket Australia (@CricketAus) January 22, 2020The eleventh Indoor Cricket World Cup is coming to Australia in 2020! 🎉 All the deets 👉 https://t.co/T85WVYIEZv pic.twitter.com/Rdqvmh7vzO
— Cricket Australia (@CricketAus) January 22, 2020
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி ஆடவர், மகளிர் பிரிவில் 21, மற்றும் 21 வயதுக்குட்பட்டோருக்கான அணிகளுக்கும் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள கேஸி உள் அரங்கு மைதானத்திலும், சிட்டி பவர் உள் அரங்கு மைதானத்திலும் நடைபெறுகிறது. இறுதியாக 2017இல் துபாயில் நடைபெற்ற இந்தத் தொடரை ஆடவர், மகளிர் பிரிவில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு கோப்பைக்காக மோதும் ஐந்து டீம்... பிக் பாஷ் புதுமை!