ETV Bharat / sports

'ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுக்க தயார்' - ஹசில்வுட்!

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டை மீட்பதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளனர் என்று வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

Australia Players willing to take pay cut, says Hazlewood

author img

By

Published : Apr 20, 2020, 1:25 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றினால் இதுவரை உலகெங்கிலும் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும், இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை மீட்பதற்காக அணியின் வீரர்கள் தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுக்கவும் தயாராக உள்ளனர் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "பெருந்தொற்றால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் கால்பந்து வீரர்கள் தங்களது ஊதியத்தை குறைக்கும் முடிவுக்கு வந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தற்போதுதான் அவர்களின் நிலை எனக்கு புரிந்துள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிலும் அதே நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த விளையாட்டில் நாங்களும் ஒரு அங்கம் என ஒவ்வொரு முறையும் கூறுவது உண்டு. இவ்விளையாட்டின் மூலமாக நங்கள் உச்சத்தில் உள்ளோம். இதற்காக எங்களது ஊதியத்தை கொடுப்பதன் மூலம், மீண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை மீட்டெடுப்போம். முன்பு அதிகமாக சம்பாதித்தோம், தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் குறைவான ஊதியத்தைப் பெறுவோம்.

நாங்கள் வேறு எந்த விளையாட்டிலிருந்தும் வேறுபட்டவர்கள் அல்ல. என்னைப் பொறுத்த வரை இது நம்மை எவ்வளவு பாதிக்கப்போகிறது என்பதை விட, இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கப்போகிறது என்பது குறித்த சிந்தனை மட்டும்தான் உள்ளது. ஒருவேளை இதே சூழல் அடுத்த கோடை வரை நீடித்தால், அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஜாம்பவானை முடி திருத்துபவராக மாற்றிய கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.