ETV Bharat / state

ஈரோடு கிழக்கில் "கொட்டகை பாணி" - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - ELECTION VOTERS STAYING CAMP CASE

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 1:12 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில் அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தொகுதியில் வாக்காளர்களை கொட்டகைகளில் அடைத்து வைத்து, பின் காலையில் ஓட்டு போடுவதாகவும், அதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அவர் அளித்த மனுவில், “தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமகன் ஈவேரா மரணத்தை தொடர்ந்து 2023ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டதாகவும், இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும், மற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும் ஒவ்வொரு வார்டிலும் கொட்டகைகளை அமைத்து, அதில் வாக்காளர்களை தங்க வைத்தனர்.

மேலும், கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும், வாக்குக்கு பணம் வழங்கப்பட்டதாகவும், அதனாலேயே தான் அந்த தேர்தலில் தான் போட்டியிட்டு தோல்வியடைந்ததாகவும். அதேபோல் தற்போது நடக்க உள்ள தேர்தலிலும் கொட்டகை பாணி பின்பற்றக் கூடும் என அச்சம் எழுந்துள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரி வழக்கு - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

மேலும் அந்த மனுவில், தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ - பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும், தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்திருந்ததாக மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து தான் ஜனவரி 8 ஆம் தேதி அளித்த விண்ணப்பத்துக்கு பதிலளிக்கவில்லை என்பதால், அதனை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, "மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும் யார் தான் சலுகைகள் வழங்கவில்லை? எனத் தெரிவித்து, மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.