ETV Bharat / state

தேனியில் 94 வயது மூதாட்டி தற்கொலை! - மகன்கள் பார்க்க வரவில்லை என்பதால் விபரீத முடிவு? - OLD LADY SUICIDE IN SUICIDE

தேனியில் மகன்கள் சரி வர தன்னைக் கவனிக்கவில்லை என மன உளைச்சலில் இருந்த 94 வயது மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 2:12 PM IST

தேனி: வீரபாண்டி அருகே மகன்கள் தன்னை பார்க்க வராததால் மன உளைச்சலில் இருந்த 94 வயது மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி முல்லைப் பெரியாறு ஆற்றின் ஓரத்தில் இறந்த மூதாட்டியின் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்துள்ளது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வீரபாண்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வீரபாண்டி போலீசார், உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மூதாட்டி உயிரிழந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை தவிர்ப்பு விழிப்புணர்வு
தற்கொலை தவிர்ப்பு விழிப்புணர்வு (ETV Bharat Tamil Nadu)

அந்த விசாரணையில், மூதாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி கம்பம் பிள்ளையார் கோயிலைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக தனது மகனிடம் ஏற்பட்ட பிரச்னைையில், கோபித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், அப்போது மூதாட்டியை காப்பாற்றி பேத்தி வீட்டில் வைத்து பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தூத்துக்குடி அருகே சிறுமியின் உயிரைப் பறித்த அரிசி...பெற்றோர் கதறல்!

அதனைத் தொடர்ந்து மூதாட்டி தனது மகன்கள் தன்னை சரிவர கவனிக்கவில்லை என மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த மூதாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் மூதாட்டியின் சடலத்தை ஊர்மக்கள் ஆற்றில் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மகன்கள் தன்னை சந்திக்க வராததால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.