ETV Bharat / sports

காட்டுத்தீக்காக ரிக்கி பாண்டிங்கை எதிர்க்கும் வார்னே!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே உள்ளிட்டோர் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகின்றனர்.

Legends to come out of retirement for bushfire relief

author img

By

Published : Jan 13, 2020, 12:30 PM IST

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக பரவிவரும் காட்டுத்தீயால் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாயிரம் வீடுகள், 75 லட்சம் ஏக்கர் அளவிலான வனப்பகுதிகள் தீயில் எரிந்த நாசமாகின. மேலும், இதில் லட்சக்கணக்கான உயிரினங்களும் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கப்பட்டுவருகிறது.

Shane Warne
ஷேன் வார்னே

இதனிடையே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, சமீபத்தில் தனது டெஸ்ட் தொப்பியை ஏலத்தில் விட்டு அதிலிருந்து கிடைத்த ஒரு மில்லியன் டாலர்களை காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டோரின் நிவாரணத்திற்கு வழங்கினார். இந்நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தற்போது முன்வந்துள்ளது.

அதன்படி, வரும் பிப்ரவரி 8ஆம் தேதி புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் என்ற பெயரில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி, ஷேன் வார்னே தலைமையிலான அணியை எதிர்கொள்கிறது.

  • BIG NEWS: Ricky Ponting and Shane Warne will captain star-studded teams in a Bushfire Relief Match to be played on February 8!

    Cricket’s day of giving will celebrate volunteers, career firefighters and emergency services, and raise funds for @RedCrossAU. 🏏 #AustraliaFires pic.twitter.com/Fi3Mf30yCL

    — Cricket Australia (@CricketAus) January 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இப்போட்டியில், முன்னாள் வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வாட்சன், மைக்கேல் கிளார்க், அலெக்ஸ் பிளாக்வெல், பிரெட் லீ, ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர். பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன் இப்போட்டி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதில், கிடைக்கும் தொகையை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2004இல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் வகையில், மெல்போர்னில் ஆஸ்திரேலிய அணிக்கும், உலக அணிக்கும் ஒருநாள் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிட்த்தக்கது.

இதையும் படிங்க: 'நான் ஏன் டைவ் அடிக்கவில்லை' - உலகக்கோப்பை அரையிறுதி குறித்து மௌனம் கலைத்த தோனி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.