ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இருப்பினும் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதன் மூலம் ஐசிசியின் உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணியும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன. இப்பட்டியலில் இந்திய அணி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் உலகக்கோப்பைத் தொடருக்கு இந்திய அணி நேரடியாக தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் லீக் புள்ளிப்பட்டியல்:
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
ஆஸ்திரேலியா | 6 | 4 | 2 | 40 |
இங்கிலாந்து | 6 | 3 | 3 | 30 |
பாகிஸ்தான் | 3 | 2 | 1 | 20 |
ஜிம்பாப்வே | 3 | 1 | 2 | 10 |
அயர்லாந்து | 3 | 1 | 2 | 10 |
இந்தியா | 3 | 1 | 2 | 09 |
நெதர்லாந்து | - | - | - | - |
நியூசிலாந்து | - | - | - | - |
ஆஃப்கானிஸ்தான் | - | - | - | - |
இதையும் படிங்க:‘நடராஜன் இந்திய அணியில் விளையாடுவது எங்கள் ஊருக்கே பெருமை’ - தாயார் பெருமிதம்