மெல்போர்னில் நடைபெற்றுவரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (டிச.27) நடைபெற்றது. இதில் 36 ரன்களுடன் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சுப்மன் கில் 45 ரன்களிலும், சட்டேஸ்வர் புஜாரா 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ரஹானே - ஹனுமா விஹாரி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் விஹாரி 21 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 150 ரன்களைக் கடந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆட முயற்சித்த ரிஷப் பந்த் 29 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரஹானே அரைசதம் கடந்து அசத்தினார்.
-
💯
— BCCI (@BCCI) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Captain @ajinkyarahane88 leading from the front. Brings up a brilliant century. His 12th in Test cricket 👏👏#AUSvIND pic.twitter.com/23w9KS57fw
">💯
— BCCI (@BCCI) December 27, 2020
Captain @ajinkyarahane88 leading from the front. Brings up a brilliant century. His 12th in Test cricket 👏👏#AUSvIND pic.twitter.com/23w9KS57fw💯
— BCCI (@BCCI) December 27, 2020
Captain @ajinkyarahane88 leading from the front. Brings up a brilliant century. His 12th in Test cricket 👏👏#AUSvIND pic.twitter.com/23w9KS57fw
அதன் பின் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும் பொறுப்பாக விளையாட இந்திய அணி தனது இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரஹானே, சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 12ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 82 ரன்கள் முன்னிலையிலும் உள்ளது.
-
Rain stops play and it's stumps at the MCG on day two ☔
— ICC (@ICC) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
India lead by 82 runs with the partnership for the sixth wicket past 100 👏 #AUSvIND SCORECARD 👉 https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/vehxjPSmnm
">Rain stops play and it's stumps at the MCG on day two ☔
— ICC (@ICC) December 27, 2020
India lead by 82 runs with the partnership for the sixth wicket past 100 👏 #AUSvIND SCORECARD 👉 https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/vehxjPSmnmRain stops play and it's stumps at the MCG on day two ☔
— ICC (@ICC) December 27, 2020
India lead by 82 runs with the partnership for the sixth wicket past 100 👏 #AUSvIND SCORECARD 👉 https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/vehxjPSmnm
இந்திய அணி தரப்பில் ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார், பாட் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நாதன் லயன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க:‘தந்தையின் கனவை சிராஜ் நிறைவேற்றி விட்டார்’