டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 115 ரன்கள் எடுத்தாலும், தங்களின் சிறப்பான பந்துவீச்சால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் மூன்றாவதாக களமிறங்கி 19 பந்துகளில் 37 ரன்கள் (5 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து அசத்தினார். எனினும் அவர் பந்துவீசியபோது வித்தியாசமான முறையில் பந்துவீசியது ரசிகர்களை குழப்பமடையச் செய்தது. அஸ்வின் அந்த இறுதி ஓவரில் வீசிய ஐந்தாவது பந்துதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கிறது.
-
Ravi Ashwin being unpredictable.#TNPL #TNPL2019 pic.twitter.com/CJJkPpsCR4
— Shrii (@4th_Umpire_) July 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ravi Ashwin being unpredictable.#TNPL #TNPL2019 pic.twitter.com/CJJkPpsCR4
— Shrii (@4th_Umpire_) July 19, 2019Ravi Ashwin being unpredictable.#TNPL #TNPL2019 pic.twitter.com/CJJkPpsCR4
— Shrii (@4th_Umpire_) July 19, 2019
அஸ்வின் அந்த பந்தை வீசும்போது அவரது இடக்கை எவ்வித அசைவுமின்றி இருந்தது. இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. சிறந்த பந்துவீச்சாளரான அஸ்வின் தெருவில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்களைப் போன்று பந்து வீசியதால் ரசிகர்கள் ட்விட்டரில் கலாய்த்துவருகின்றனர்.
மேலும் அஸ்வின் அநாகரிமாக பந்துவீசுகிறார்; எனவே அவரை தடை செய்யுங்கள் என்றும் ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டுள்ளனர்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராகத் திகழ்ந்த அஸ்வின் தற்போது டெஸ்ட் அணியில் மட்டுமே களமிறக்கப்பட்டுவருகிறார். இவர் இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 336 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால் அவ்வபோது அஸ்வின் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு ரசிகர்களின் வசைபாட்டுக்கு ஆளாவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அஸ்வின் ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தார். மான்கட் முறை ஐசிசியின் விதியின் கீழ் இருந்தாலும், அஸ்வின் அவ்வாறு அவுட் செய்தது தவறு என்று விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.