ETV Bharat / sports

ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Ashwin becomes fourth highest wicket-taker for India with 599 international wickets

author img

By

Published : Feb 24, 2021, 9:22 PM IST

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது.

இதையடுத்து முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதில் அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 599 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் இந்தியா சார்பாக சரவ்தேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இப்பட்டியலில் அனில் கும்ப்ளே (953) முதலிடத்திலும், ஹர்பஜன் சிங் (707) இரண்டாம் இடத்திலும், கபில் தேவ் (687) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அதேசமயம் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினால், டெஸ்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது இந்தியர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: சொந்த மைதானத்தில் கலக்கிய அக்சர்; 112 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.