ETV Bharat / sports

டி20 உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா இந்திய மகளிர் அணி? - பலம், பலவீனம் குறித்த அலசல் - இந்திய மகளிர் அணியின் பலம், பலவீனம்

ஆஸ்திரேலியாவில் நாளை மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் பலம், பலவீனம் குறித்த சிறு பார்வை இதோ...

Are Indian eves ready to taste their maiden success in T20 World Cup?

author img

By

Published : Feb 20, 2020, 2:27 PM IST

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மகளிர் கிரிக்கெட் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க முக்கியக் காரணமே 2017 மகளிர் உலகக்கோப்பை தொடர்தான். அந்தத் தொடரில் இந்திய அணி இறுதிச்சுற்றுவரை முன்னேறியதை விட, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் போன்ற நட்சத்திர வீராங்கனைகளின் ஆட்டத்திறன் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

அன்றிலிருந்து இந்திய மகளிர் அணி விளையாடும் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் தொடர்ந்து நீடித்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில், மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்கவுள்ள முதல் போட்டியிலேயே இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

ஹர்மன்ப்ரீத் கவுர்
இந்திய அணி

கடந்த முறை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடிய போதிலும், இங்கிலாந்திடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. ஆனால், இம்முறை இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிரித்துள்ளது. இந்தத் தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் இந்திய அணி இறுதிச்சுற்றுவரை முன்னேறியிருந்தது. அதற்கு முன் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் 3-1 என்ற கணக்கிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை 5-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி சிறப்பான ஃபார்மில் இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஷஃபாலி வர்மா

தற்போது இந்திய அணியின் பலம், பலவீனம் குறித்து சிறு பார்வை இதோ. இந்தத் தொடருக்காக இந்திய அணியில் தேர்வுசெய்யப்பட்ட 15 வீராங்கனைகளில் ஒன்பது பேர் 22 வயதிற்குள் இருக்கின்றனர். அணியில் பெரும்பாலான இளம் வீராங்கனைகளே இடம்பிடித்திருப்பதுதான் இந்திய அணியின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். குறிப்பாக, தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மாதான் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக (X factor) இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவான டாப் ஆர்டர்:

மித்தாலி ராஜ் டி20 போட்டியிலிருந்து கடந்தாண்டு ஓய்வுபெற்ற நிலையில், அவருக்குப் பதிலாக 16 வயது இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா இந்திய அணியில் இடம்பிடித்தார். தனது அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணிக்குச் சிறப்பான தொடக்கத்தைத் தந்துவருகிறார். சமீபத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின்போது 49 பந்துகளில் 73 ரன்கள் எடுத்ததன் மூலம் குறைந்த வயதில் அரைசதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சர்வதேச சாதனையை முறியடித்தார்.

Smriti Mandhana
ஸ்மிருதி மந்தனா

அவர் அதிரடியாக விளையாடுவதால் மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தானா, மூன்றாம் வரிசை வீராங்கனை ஜெமியா ராட்ரிகஸ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்து களத்தில் செட்டில் ஆக நேரம் கிடைக்கிறது. அதன்பின் நான்காவது வரிசையில் களமிறங்கும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வழக்கம்போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் வாய்ப்பு அமைகிறது. எனவே இந்திய அணியின் டாப் ஆர்டர் மிகவும் வலுவாகவே இருக்கிறது.

அட்டகாசமான சுழற்பந்துவீச்சு கூட்டணி:

ஆடவர் அணியாக இருந்தாலும் சரி, மகளிர் அணியாக இருந்தாலும் சரி, இந்திய அணியில் திறமையான சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகளவில் இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய அணியின் பெரும்பாலான வெற்றிக்கு துணையாக இருப்பதே சுழற்பந்துவீச்சாளரான தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி ஜெய்காட் ஆகியோர்தான்.

Poonam yadav
பூனம் யாதவ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் கையை விரித்தாலும், பூனம் யாதவின் அபாரமான சுழற்பந்துவீச்சினால் இந்திய அணி 108 ரன்களை டிஃபெண்ட் செய்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இவர்களது அட்டாகசமான கூட்டணி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் ஒர்க் அவுட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலவீனம்:

சொதப்பலான மிடில் ஆர்டர்:

இந்திய அணிக்கு எப்படி டாப் ஆர்டர் பலமாக இருக்கிறதோ அதற்கு நேர்மறையாக மிடில் ஆர்டர் உள்ளது. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு முத்தரப்பு டி20 தொடர்தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 34 பந்துகளில் 41 ரன்கள்தான் தேவைப்பட்டன. கையில் ஆறு விக்கெட்டுகள் இருந்தபோதிலும், இந்திய அணியால் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து 30 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

தீப்தி ஷர்மா, விக்கெட் கீப்பர் தன்யா பாட்டியா, ஹர்லீன் தியோல், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கின்றனர். ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமியா ராட்ரிகஸ், ஹர்மன் ப்ரீத் கவுர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் ஸ்தம்பித்துவிடும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இந்திய அணி பந்துவீச்சாளர் ஷீகா பாண்டேவின் உதவியால் 20 ஓவர்களில் 107 ரன்களை எடுத்தது.

வேகமும் விவகேமும் இல்லாத பந்துவீச்சு:

டி20 போட்டியிலிருந்து ஜூலன் கோஸ்வாமி ஓய்வுபெற்ற பின் இந்திய அணி பெரும்பாலும் சுழற்பந்துவீச்சை சார்ந்தே இருக்கிறது. பந்துவீச்சு தரப்பில் ஷீகா பாண்டேவை தவிர்த்து அருந்ததி ரெட்டி, பூஜா ஆகியோரது பந்துவீச்சு நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லாமல் இருப்பது இந்திய அணியின் பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது.

மோசமான ஃபீல்டிங்:

இந்திய அணியில் பெரும்பாலான இளம் வீராங்கனைகள் அணியில் இடம்பிடித்திருந்த போதிலும், அவர்களால் சிறப்பாக ஃபீல்டிங் செய்ய முடியவில்லை. அணியில் தீப்தி ஷர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமியா ராட்ரிகஸ் ஆகியோரை தவிர மற்ற யாரும் ஃபீல்டிங்கில் சொல்லிக் கொள்ளும் வகையில் செயல்படாமல் இருக்கின்றனர்.

ஹர்மன்ப்ரீத் கவுர்
இந்திய அணி

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் போட்டிகள்:

  1. இந்தியா vs ஆஸ்திரேலியா, பிப்ரவரி 21, சிட்னி
  2. இந்தியா vs வங்கதேசம், பிப்ரவரி 24, பெர்த்,
  3. இந்தியா vs நியூசிலாந்து, பிப்ரவரி 27, மெல்போர்ன்
  4. இந்தியா vs இலங்கை, பிப்ரவரி 29, மெல்போர்ன்

எது எப்படி இருந்தாலும், இந்திய அணி இந்தத் தொடரில் தங்களது குறைகளை நிறைகளாக மாற்றி இம்முறை டி20 உலகக்கோப்பை வென்று சரித்திரம் படைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நாளைய போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் இருக்கின்றனர். சரித்திரம் படைக்குமா இந்திய மகளிர் அணி என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்து வந்த பாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.