இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தினால் அந்த அணிக்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான ஒப்பந்தப் பட்டியல் அதிகாரப் பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 10 டெஸ்ட் அணிக்கான ஒப்பந்தங்களும், 12 டி20 மற்றும் ஒருநாள் அணிக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இதில் குறிப்பிடத்தக்க வகையில் அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் முறையாக இங்கிலாந்து அணியின் மூன்று வகையிலான போட்டிகளுக்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதையும் படிங்க...!ஆஷஸ் கிரிக்கெட்: ஆர்ச்சரை எங்கேயோ கொண்டுபோயிடுச்சுல்ல! #ICCRankings
இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர்களான அலேக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லி, லியம் ஃப்ளங்கட் ஆகியோர் எந்தவித ஒப்பந்தத்திலும் கையெழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஒப்பந்தமானது வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஓராண்டுகளுக்கு பின்பற்றப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
-
Selectors have awarded 10 Test contracts and 12 White Ball contracts
— England Cricket (@englandcricket) September 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Selectors have awarded 10 Test contracts and 12 White Ball contracts
— England Cricket (@englandcricket) September 20, 2019Selectors have awarded 10 Test contracts and 12 White Ball contracts
— England Cricket (@englandcricket) September 20, 2019
டெஸ்ட் போட்டிக்கு ஒப்பந்தமானவர்கள்:
ஜேம்ஸ் ஆண்டர்சன் (லங்காஷயர்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (சசெக்ஸ்), ஜானி பேர்ஸ்டோவ் (யார்க்ஷயர்), ஸ்டூவர்ட் பிராட் (நாட்டிங்ஹாம்ஷைர்), ரோரி பர்ன்ஸ் (சர்ரே), ஜோஸ் பட்லர் (லங்காஷயர்), சாம் குர்ரான் (சர்ரே), ஜோ ரூட் (யார்க்ஷயர்), பென் ஸ்டோக்ஸ் (டர்ஹாம்), கிறிஸ் வோக்ஸ் (வார்விக்ஷயர்).
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஒப்பந்தமானவர்கள்:
மொயின் அலி (வொர்செஸ்டர்ஷைர்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (சசெக்ஸ்), ஜானி பேர்ஸ்டோவ் (யார்க்ஷயர்), ஜோஸ் பட்லர் (லங்காஷயர்), ஜோ டென்லி (கென்ட்), ஈயன் மோர்கன் (மிடில்செக்ஸ்), அடில் ரஷீத் (யார்க்ஷயர்), ஜோ ரூட் (யார்க்ஷயர்), ஜேசன் ராய் (சர்ரே), பென் ஸ்டோக்ஸ் (டர்ஹாம்), கிறிஸ் வோக்ஸ் (வார்விக்ஷயர்), மார்க் வூட் (டர்ஹாம்).
மேலே குறிப்பிட்ட சசெக்ஸ், யார்க்ஷயர், சர்ரே, லங்காஷயர், டர்ஹாம், கெண்ட், மிடில் செக்ஸ் ஆகியவை இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் அணிகளாகும்.