கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் இம்மாதம் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஐபிஎல் அணிகள் கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று, பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி, தனது தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக அமெரிக்க கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அலி கான், கேகேஆர் அணியில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவர் இந்தாண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கோப்பையை வென்ற, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இவரை தங்கள் அணியில் சேர்த்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை அலி கான் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முதல் ஒருநாள்: ஆஸி.யிடம் வீழ்ந்த இங்கிலாந்து!