பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி. இவரது மூத்த மகள் அக்ஷா அப்ரிடி.
இவருக்கும் தற்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடிக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இத்தகவலை சாகித் அப்ரிடி ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
அதில், “இரு குடும்பங்களும் ஒரு முடிவை எடுத்துள்ளோம். எனது மகள், ஷாகினுடன் நிச்சயதார்த்தம் செய்யப்போகிறாள்” என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ஷாகின் ஷா அப்ரிடியின் தந்தை ஆயிஸ் கான் கூறுகையில், “நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஷாகின், அக்ஷா திருமணம் குறித்து இரு குடும்பங்களும் கடந்த சில மாதங்களாக கலந்துரையாடினோம். விரைவில் அவர்களின் திருமண தேதி இறுதி செய்யப்படும் என நம்புகிறோம்” என்றார்.
சாகித் அப்ரிடி, ஷாகின் ஷா அப்ரிடி ஆகிய இருவரும், நடப்பாண்டு கரோனாவால் பாதியில் ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2021: தொடரின் முழுமையான பட்டியல்!