கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேச மக்களுக்கு உதவும் வகையில் அந்நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முஷ்பிகூர் ரஹிம், டெஸ்டில் தனது முதலாவது இரட்டை சதமடித்த பேட்டை ஏலத்தில் விற்பனை செய்து, அதில் கிடைக்கும் மொத்த தொகையையும் மருத்துவமனைக்கு அளிப்பதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, முஷ்பிக்கூரின் பேட்டை 20 ஆயிரம் டாலருக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். இதன் இந்திய மதிப்பானது ரூ.15 லட்சமாகும். இது குறித்து முஷ்பிக்கூர் தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில்,
"எனது பேட்டை ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்த முடிவிலிருந்து பின்வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். ஏனெனில் நிறைய போலி ஏல ஈடுபாட்டாளர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து அஃப்ரிடி அவர்கள் எனக்கு நேரடியாக தொலைபேசி அழைப்பில் இணைந்து, எனது பேட்டின் ஏலம் குறித்தான விவரங்களை கேட்டறிந்தார்.
அதன் பின் இரு தினங்களுக்கு முன்னதாக அவரின் சொந்த நிறுவனத்தின் மூலமாக எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் உங்களது பேட்டை நான் 20 ஆயிரம் டாலருக்கு வாங்க விரும்புகிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
-
Thanks for your support brother ✊✊✊ pic.twitter.com/QeLiJBx0nY
— Mushfiqur Rahim (@mushfiqur15) May 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thanks for your support brother ✊✊✊ pic.twitter.com/QeLiJBx0nY
— Mushfiqur Rahim (@mushfiqur15) May 15, 2020Thanks for your support brother ✊✊✊ pic.twitter.com/QeLiJBx0nY
— Mushfiqur Rahim (@mushfiqur15) May 15, 2020
அதன்பின் அஃப்ரிடி ட்விட்டர் வாயிலாக முஷ்பிக்கூரிடம், நீங்கள் செய்துள்ள செயல் உங்களை ஒரு நிஜ நாயகராக இவ்வுலகிற்கு காட்டியுள்ளது. மேலும் இவ்வுலகம் தற்போதுள்ள நிலைமையில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையோடு இருப்பதே தேவையான ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'டென்னிஸில் சாதனை படைப்பதே எனது கனவு' - ஜோகோவிச்