ஆஃப்கானிச்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடர் நடைபெற்றது. அதில் டாஸ் என்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் முதலாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, 314 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ரஜ்மத் ஷா 98 ரன்களும், கேப்டன் ஆஃப்கான் 67 ரன்களும், ஷாஹிதி 61 ரன்களும் எடுத்தனர். முதலாவது இன்னிங்ஸில் ஆஃப்கானிஸ்தான் அணி 140 ரன்கள் முன்னிலப் பெற்றது.
பின்னர் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணி, 288 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதில் பாப்பிர்னி 82 ரன்கள் எடுத்தார். ஆஃப்கானிஸ்தான் சார்பில் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் டெஸ்ட் அரங்குல் தனது முதல் 5 விக்கெட் எடுத்து சாதனைப் படைத்தார்.
இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, நான்காம் நாளில் ஜனத்-ரஹ்மத் ஷா இணையின் அட்டகாசமான ஆட்டத்தால் 149 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இதன்மூலம்ஆஃப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அரங்கில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த ரஹ்மத் ஷா தேர்வு செய்யப்பட்டார்.
The Test could have gone either way on the fourth morning, but Rahmat Shah and Ishanullah Janat held off the Ireland bowlers to seal a historic maiden Test win for Afghanistan. #AFGvIRE REPORT ⬇️ https://t.co/47A6QAQ3RY pic.twitter.com/nCSJF21YpI
— ICC (@ICC) March 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Test could have gone either way on the fourth morning, but Rahmat Shah and Ishanullah Janat held off the Ireland bowlers to seal a historic maiden Test win for Afghanistan. #AFGvIRE REPORT ⬇️ https://t.co/47A6QAQ3RY pic.twitter.com/nCSJF21YpI
— ICC (@ICC) March 18, 2019The Test could have gone either way on the fourth morning, but Rahmat Shah and Ishanullah Janat held off the Ireland bowlers to seal a historic maiden Test win for Afghanistan. #AFGvIRE REPORT ⬇️ https://t.co/47A6QAQ3RY pic.twitter.com/nCSJF21YpI
— ICC (@ICC) March 18, 2019