அயர்லாந்து-ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி டேராடூன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய அயர்லாந்து அணியின் கேப்டன் போர்ட்டர்ஃபீல்டு-ஸ்டிர்லிங் இணை முதல் விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டிர்லிங் 26 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் போர்ட்டர்ஃபீல்டு 9 ரன்னிலும், தொடர்ந்து வந்த பால்பிர்னி 4 ரன்னிலும், ஜேம்ஸ் 4, அனுபவ வீரர் கெவின் ஓ பிரையன் 12, ஸ்டூவர்ட் 0 என ஒற்றை இலக்க ரன்களில் அயர்லாந்து அணி வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேற, ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல், அயர்லாந்து அணி 85 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
கடைசி விக்கெட்டுக்கு ஜார்ஜ் டாக்ரெல்-டிம் இணை அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தியது. டிம் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து சிறப்பாக ஆடிகையில், ஜார்ஜ் டாக்ரெல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டிம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தார். பத்தாவது விக்கெட்டுக்கு இந்த இணை 87 ரன்களை சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணியில் யாமின், நபி தலா 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான், வாக்கர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
An 87-run 10th wicket partnership between Tim Murtagh (54*) and George Dockrell (39) salvages the Ireland innings - Afghanistan dismiss the visitors for 172 just before tea on day one.#AFGvIRE BLOG ➡️ https://t.co/mV1o12EBt1
— ICC (@ICC) March 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
LIVE STREAM 🎥 https://t.co/BvJYOUTDxI pic.twitter.com/S4f7bV5S86
">An 87-run 10th wicket partnership between Tim Murtagh (54*) and George Dockrell (39) salvages the Ireland innings - Afghanistan dismiss the visitors for 172 just before tea on day one.#AFGvIRE BLOG ➡️ https://t.co/mV1o12EBt1
— ICC (@ICC) March 15, 2019
LIVE STREAM 🎥 https://t.co/BvJYOUTDxI pic.twitter.com/S4f7bV5S86An 87-run 10th wicket partnership between Tim Murtagh (54*) and George Dockrell (39) salvages the Ireland innings - Afghanistan dismiss the visitors for 172 just before tea on day one.#AFGvIRE BLOG ➡️ https://t.co/mV1o12EBt1
— ICC (@ICC) March 15, 2019
LIVE STREAM 🎥 https://t.co/BvJYOUTDxI pic.twitter.com/S4f7bV5S86
பின்னர் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜனத் 7 ரன்னிலும், ஷேசாத் 40 ரன்களில் ஆட்டமிழக்க, முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகள் இழந்து 90 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.