வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதில் ஆப்கானிஸ்தான் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி குறைந்த போட்டிகளில் விளையாடி 50 டி20 வெற்றிகளைப் பெற்ற அணிகள் பட்டியளில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
Some thing you call achievement
— Atal ahmadzai (@Atalahmadzai6) September 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The fastest to 50 wins Afghanistan 💪💪💪💪💪 @Aziza_Begham pic.twitter.com/uL0RVo8Mm2
">Some thing you call achievement
— Atal ahmadzai (@Atalahmadzai6) September 15, 2019
The fastest to 50 wins Afghanistan 💪💪💪💪💪 @Aziza_Begham pic.twitter.com/uL0RVo8Mm2Some thing you call achievement
— Atal ahmadzai (@Atalahmadzai6) September 15, 2019
The fastest to 50 wins Afghanistan 💪💪💪💪💪 @Aziza_Begham pic.twitter.com/uL0RVo8Mm2
இச்சாதானையை ஆப்கானிஸ்தான் அணி 72 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 50 வெற்றிகளைப் பெற்றது. இதற்கு முன் தென்னாப்பிரிக்க அணி 83 போட்டிகளில் 50 வெற்றிகளை பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அதனை ஆப்கானிஸ்தான் அணி முறியடித்துள்ளது.
-
Afghanistan have broken their own record of the longest winning streak in Men's T20I cricket 🙌 pic.twitter.com/k4kX20Y3VG
— ICC (@ICC) September 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Afghanistan have broken their own record of the longest winning streak in Men's T20I cricket 🙌 pic.twitter.com/k4kX20Y3VG
— ICC (@ICC) September 16, 2019Afghanistan have broken their own record of the longest winning streak in Men's T20I cricket 🙌 pic.twitter.com/k4kX20Y3VG
— ICC (@ICC) September 16, 2019
அதுமட்டுமில்லாமல், 2016-17 ஆம் ஆண்டு தான் நிகழ்த்திய சாதனையான தொடர்ந்து 11 சர்வதேச டி20 வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை தற்போது 2018-19ஆம் ஆண்டில் தொடர்ந்து 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி முறியடித்துள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக டி20 வெற்றிகளைப் பெற்ற அணிகள் வரிசையிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி.