பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்றுவருகிறது. முன்னதாக, ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இப்போட்டியில் சதம் அடித்தததன் மூலம், அறிமுகமான இரண்டுவித போட்டிகளிலும் (ஒருநாள், டெஸ்ட்) சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனயைப் படைத்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஆபித் அலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மீண்டும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுக்க, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 271 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து, 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிவரும் பாகிஸ்தான் அணியின் மூன்றாம் தொடக்க வீரர்களான ஷான் மசூத், ஆபித் அலி ஆகியோர் சதம் அடித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர்.
-
Two centuries in three innings.
— Pakistan Cricket (@TheRealPCB) December 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
FIRST PAKISTAN BATSMAN TO SCORE 100s IN HIS FIRST TWO TEST MATCHES!
Well done @AbidAli_Real 🔥🔥🔥#PAKvSL https://t.co/ZbY9reTRyg pic.twitter.com/UX6ncfflxQ
">Two centuries in three innings.
— Pakistan Cricket (@TheRealPCB) December 21, 2019
FIRST PAKISTAN BATSMAN TO SCORE 100s IN HIS FIRST TWO TEST MATCHES!
Well done @AbidAli_Real 🔥🔥🔥#PAKvSL https://t.co/ZbY9reTRyg pic.twitter.com/UX6ncfflxQTwo centuries in three innings.
— Pakistan Cricket (@TheRealPCB) December 21, 2019
FIRST PAKISTAN BATSMAN TO SCORE 100s IN HIS FIRST TWO TEST MATCHES!
Well done @AbidAli_Real 🔥🔥🔥#PAKvSL https://t.co/ZbY9reTRyg pic.twitter.com/UX6ncfflxQ
இதனால், அந்த அணி மூன்றாம் ஆட்டநாள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 395 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த ஷான் மசூத் 135 ரன்களிலும் ஆபித் அலி 174 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
முதல் போட்டியைப் போல இப்போட்டியிலும் சதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் இரண்டு ஆட்டங்களிலும் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஆபித் அலி படைத்துள்ளார். இதுமட்டுமின்றி இச்சாதனை படைத்த ஒன்பதாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்கள்
- வில்லியம் பொன்ஸ்ஃபோர்டு (ஆஸ்திரேலியா)
- டக் வால்டர்ஸ் (ஆஸ்திரேலியா)
- கிரெக் ப்ளிவட் (ஆஸ்திரேலியா)
- முகமது அசாருதீன் (இந்தியா)
- சவுரவ் கங்குலி (இந்தியா)
- ரோஹித் சர்மா (இந்தியா)
- அல்வின் கலிச்சரண் (வெஸ்ட் இண்டீஸ்)
- ஜிம்மி நீஷம் (நியூசிலாந்து)
- ஆபித் அலி (பாகிஸ்தான்
இதையும் படிங்க: ஐபிஎல் ஏலம்: விலைபோன 48 வயது வீரரும்... வாங்கப்படாத 14 வயது வீரரும்...!