ETV Bharat / sports

'கை இல்லாட்டி என்னங்க... மனசுல சாதிக்க தைரியம் இருக்கு' - மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் - சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்

டிபிஎல் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர் சீனிவாசனுக்கு, தமிழ்நாடு அரசு உதவ வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

a-disabled-cricketer-seeking-the-help-of-the-government-of-tamil-nadu

author img

By

Published : Oct 8, 2020, 10:30 PM IST

Updated : Oct 14, 2020, 8:19 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாட்சி அருகேவுள்ள மாமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (28). பிறவி மாற்றுத் திறனாளியான சீனிவாசன், சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வத்தைக் கொண்டுள்ளார். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர், தனது பாட்டியின் அரவணைப்பில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.

தொடர்ந்து கிரிக்கெட்டின் மேல் இருந்த தீராத காதலால், பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, அதன்மூலம் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரியிலும், தனது கிரிக்கெட்டை தொடர்ந்து சீனிவாசன், கல்லூரி, பல்கலைகழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்று, தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

'கை இல்லாட்டி என்னங்க... மனசுல சாதிக்க தைரியம் இருக்கு'

இவர், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார். இருமுறை வாகன விபத்திலும் சிக்கிய சீனிவாசன், தனது விடா முயற்சியின் காரணமாக, அதிலிருந்து மீண்டு தற்போது இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வரும் நவம்பரில் ஐபிஎல் போட்டி போன்றே மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான டிபிஎல் போட்டி துபாயில் நடக்கவுள்ளது. இதில், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என ஐந்து அணிகள் விளையாட உள்ளன.

இத்தொடரில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக சீனிவாசன் (28) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் வறுமையில் இருக்கும் இவர், துபாய் செல்வதற்குத் தேவையான பண வசதியின்றி தவித்துவருகிறார். இதனால் தனது சகோதரனுடன், சார் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று சார் ஆட்சியரின் உதவியை நாடியுள்ளார்.

இவரது தன்னம்பிக்கையும், விடா முயற்சியையும் கண்ட சார் ஆட்சியர் வைத்தியநாதன், மாற்றுத் திறனாளி வீரர் துபாய் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாகக்கூறியுள்ளார். இதையடுத்து நம்பிக்கையுடன் அவர் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிகரம் நீட்ட முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

சீனிவாசனின் வேண்டுகோளை அரசு ஏற்று, வளர்ந்து வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

இதையும் படிங்க:மான்கட் குறித்து ஐசிசிக்கு அறிவுரை வழங்கிய பாண்டிங்!

Last Updated : Oct 14, 2020, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.