இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டு ரசிகர்களும் இந்தத்தொடரை ஆர்வமாக பார்த்துவருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே, ஒவ்வொரு அணியிலும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவதுதான். உலகில் மிகவும் பிரபலமான இந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்களைத் தேர்வு செய்வதற்கான ஏலம் வரும் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பதிவு நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவு பெற்றது. தற்போது இந்த ஏலத்தில் 713 இந்திய வீரர்கள், 258 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 971 வீரர்கள் விடப்பட்டுள்ளனர். இந்தியா (754 ), ஆஸ்திரேலியா (55), தென் ஆப்பிரிக்கா (54), இலங்கை (39), வெஸ்ட் இண்டீஸ் (34), நியூசிலாந்து (24), இங்கிலாந்து (22), ஆப்கானிஸ்தான் (19), வங்கதேசம் (6), ஜிம்பாப்வே (3), அமெரிக்கா (1).
-
🚨🚨 971 players register for VIVO IPL 2020 Player Auction 🚨🚨
— IndianPremierLeague (@IPL) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Deadline for franchises to submit their shortlist of players: 9th December - 5PM IST 🕔
📰Full Details here https://t.co/T8pFojBd9w 📰 pic.twitter.com/gIP6GjHDar
">🚨🚨 971 players register for VIVO IPL 2020 Player Auction 🚨🚨
— IndianPremierLeague (@IPL) December 2, 2019
Deadline for franchises to submit their shortlist of players: 9th December - 5PM IST 🕔
📰Full Details here https://t.co/T8pFojBd9w 📰 pic.twitter.com/gIP6GjHDar🚨🚨 971 players register for VIVO IPL 2020 Player Auction 🚨🚨
— IndianPremierLeague (@IPL) December 2, 2019
Deadline for franchises to submit their shortlist of players: 9th December - 5PM IST 🕔
📰Full Details here https://t.co/T8pFojBd9w 📰 pic.twitter.com/gIP6GjHDar
அதில், சர்வேதச போட்டியில் விளையாடியவர்கள் 215 பேரும், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய 754 பேரும், இவர்களைத் தவிர இரண்டு உறுப்பு நாடுகளிலிருந்து இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 971 வீரர்கள் ஏலத்தில் விடப்படுவதில் மொத்தம் 73 வீரர்கள் மட்டுமே தேர்வுசெய்யப்படவுள்ளனர். அடுத்த ஐபிஎல் தொடருக்காக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட எட்டு அணிகளும் 35 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 127 வீரர்களை தக்க வைத்துகொண்டது.
13ஆவது ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வேல், கிறிஸ் லின், தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், இங்கிலாந்தின் மோர்கன், இந்தியாவின் ராபின் உத்தப்பா நாதன் லயான் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களில் யார் யார் எந்த எந்த அணிக்கு ஒப்பந்தமாவார்கள், யார் ஏலத்தில் விலைக்கு போகாமல் இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.