நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்குச் சென்றடைந்தது.
இதையடுத்து அங்கு பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வீரர்கள், அணி ஊழியர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் ஆறு வீரர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்கான பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஆறு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் நான்கு வீரர்களின் முடிவுகள் தொற்று இருப்பதாகவும், இரண்டு வீரர்களுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் கூறுகிறது. இதனையடுத்து தொற்று உறுதிசெய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
As a consequence, @TheRealPCB team’s exemption to train while in managed isolation has been put on hold until investigations have been completed. https://t.co/zQYrdk6a0I
— BLACKCAPS (@BLACKCAPS) November 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">As a consequence, @TheRealPCB team’s exemption to train while in managed isolation has been put on hold until investigations have been completed. https://t.co/zQYrdk6a0I
— BLACKCAPS (@BLACKCAPS) November 26, 2020As a consequence, @TheRealPCB team’s exemption to train while in managed isolation has been put on hold until investigations have been completed. https://t.co/zQYrdk6a0I
— BLACKCAPS (@BLACKCAPS) November 26, 2020
மேலும் வீரர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'மரடோனாவுக்கு சொந்த செலவில் சிலை வைப்பேன்' - கோவா அமைச்சர்!