அகமதாபாத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோரது அபார பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் இங்கிலாந்து அணியில் நிலைத்து ஆடிய பென் ஸ்டோக்ஸ் மட்டும் அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். பின் முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது.
-
England are all out for 205!
— ICC (@ICC) March 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Axar Patel is the pick of the bowlers with returns of 4/68.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/UHk8tQCIp9
">England are all out for 205!
— ICC (@ICC) March 4, 2021
Axar Patel is the pick of the bowlers with returns of 4/68.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/UHk8tQCIp9England are all out for 205!
— ICC (@ICC) March 4, 2021
Axar Patel is the pick of the bowlers with returns of 4/68.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/UHk8tQCIp9
அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை வீசிய ஆண்டர்சன் தனது மூன்றாவது பந்திலேயே சுப்மன் கில்லை பெவிலியனுக்கு அனுப்பி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்களை எடுத்தது.
-
Rohit Sharma and Cheteshwar Pujara take India to 24/1 by stumps on day one after their spinners bowled England out for 205.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/kZShpWUXgi
— ICC (@ICC) March 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rohit Sharma and Cheteshwar Pujara take India to 24/1 by stumps on day one after their spinners bowled England out for 205.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/kZShpWUXgi
— ICC (@ICC) March 4, 2021Rohit Sharma and Cheteshwar Pujara take India to 24/1 by stumps on day one after their spinners bowled England out for 205.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/kZShpWUXgi
— ICC (@ICC) March 4, 2021
இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 8 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். நாளை நடைபெறும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 181 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் கரோனா - பிஎஸ்எல் தொடர் ஒத்திவைப்பு!