ETV Bharat / sports

’2018 ஐபிஎல் ஏலத்தொகையானது எனது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்’ - உனாத்கட்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஏலத்தின்போது ரூ.11.5 கோடி ஏலத்தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது எனது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் எனத் தெரிவித்துள்ளார்.

2018 IPL auction price tag gives me belief on my ability: Unadkat

author img

By

Published : Apr 22, 2020, 10:42 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் இதுவரை 20ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இம்மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டு வீரர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் நேரலை, நேர்காணலில் பங்கேற்று, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவருகின்றனர். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் இஷ் சோதி, தனது அணியின் சக வீரரான ஜெய்தேவ் உனத்கட்டுடன் ஃபேஸ்புக் நேரலை உரையாடலில் பங்கேற்றார்.

இவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலின்போது உனாத்கட், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது ஏலத்தொகை குறித்து விளக்கமளித்த காணொலி இணையத்தில் வைரலானது.

உனாத்கட் கூறுகையில், "2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலம் எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசும் மிக முக்கிய இடமாக இருந்தது. இதற்குக் காரணமாக நான் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் இந்திய அணியில் இடம்பிடிக்கவும், ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய தொகைக்கு ஏலமெடுக்கவும் ஏதுவாக அமைந்தது.

அப்போது எந்த அணி ஏலத்தில் எடுத்திருந்தாலும் அது என்னை அடுத்தக்கட்ட நிலைக்கு கொண்டுசெல்லும் என்று நினைத்திருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே ராஜஸ்தான் அணி என்னை மீண்டும் ஏலத்தில் வாங்கியது. அவர்கள் வீரர்களின் செயல்பாட்டை வைத்து மட்டுமே அணி தேர்வு நடத்துவார்களே தவிர, வீரர்களின் பெயர்களை வைத்து அல்ல.

ஆனால் அத்தொடரின் நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கையை உடைக்கும்விதமாக அடுத்த சீசன் எனக்கு அமைந்தது. இருப்பினும் நான் எனது முயற்சிகளைக் கைவிடப்போவதில்லை. எனது திறமை என்வென்று எனக்குத் தெரியும். முன்பு இருந்ததைவிட தற்போது நான் அதிகம் முயற்சிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அதனை வரவுள்ள ஐபிஎல் தொடர்களில் நான் நிச்சயம் பூர்த்திசெய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஏலத்தில் ஜெய்தேவ் உனாத்கட், ரூ.3 கோடிக்கு மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலமெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 2019-20 ரஞ்சி கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'வனவிலங்குகளைக் காப்பாற்ற கையெழுத்திடுங்கள்' - பீட்டர்சன் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.