கிரிக்கெட் போட்டிகளில் சில சமயங்களில் அணியில் உள்ள வீரர்கள் பெரும்பாலானோர் டக் அவுட் ஆவது வழக்கம்தான். ஆனால், இங்கு அணியில் உள்ள அனைத்து வீரர்களும் போட்டிபோட்டுகொண்டு டக் அவுட் ஆகியுள்ளது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
மும்பையில் 16 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளிகளுக்கு இடையிலான ஹாரிஸ் ஷீல்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், எஸ்.வி.ஐ. எஸ் (சுவாமி விவேகாந்தா சர்வதேச பள்ளி) - சில்டரன் அகாடெமிக்கும் (Children Academy) போட்டி அசாத் மைதானில் நடைபெற்றது.இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த எஸ்விஐஎஸ் பள்ளி அணி 39 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 605 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் மீட் மாயேக்கர் 134 பந்துகளில் ஏழு சிக்சர்கள், 56 பவுண்டரிகள் என 338 ரன்கள் விளாசி இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். சில்ட்ரன் அகாடெமி பள்ளி அடுத்த ஆறு ஓவர்களை வீசி போட்டியின் 45 ஓவர்களை முழுமையாக முடிக்காததால், சில்ட்ரன் அகாடெமிக்கு 156 ரன்கள் தண்டனையாக வழங்கப்பட்டது. இதனால், அந்த அணி 762 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்த சூழ்நிலையில், களமிறங்கிய சில்ட்ரன் அகாடெமி வீரர்கள் அனைவரும் வந்த வேகத்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இதனிடையே எஸ்விஐஎஸ் பள்ளி அணி உதிரிகளாக ஏழு ரன்களை வழங்கியிருந்ததால், சில்ட்ரன் அகாடெமி அணி ஆறு ஓவர்களில் ஏழு ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், எஸ்விஐஎஸ் அணி இப்போட்டியில் 754 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றது.
-
In a Harris Shield match in Mumbai, one batsman made 338 from 118 balls whereas the other school team got bowled out for 7, thanks to 7 extras.😲
— Moulin (@Moulinparikh) November 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
PIc: Mumbai Mirror pic.twitter.com/uGteiws9Bg
">In a Harris Shield match in Mumbai, one batsman made 338 from 118 balls whereas the other school team got bowled out for 7, thanks to 7 extras.😲
— Moulin (@Moulinparikh) November 21, 2019
PIc: Mumbai Mirror pic.twitter.com/uGteiws9BgIn a Harris Shield match in Mumbai, one batsman made 338 from 118 balls whereas the other school team got bowled out for 7, thanks to 7 extras.😲
— Moulin (@Moulinparikh) November 21, 2019
PIc: Mumbai Mirror pic.twitter.com/uGteiws9Bg
எஸ்விஐஎஸ் அணி தரப்பில் அலோக் பால் ஆறு விக்கெட்டுகளையும், வராத் வாசி இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஒரு போட்டியில் பேட்டிங் செய்த அனைவரும் டக் அவுட்டாகியிருப்பது ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.
இதையும் படிங்க: ரெட்டைக் கதிரே #Parkinsonstwins... ஒரே ஆட்டத்தில் மாறி மாறி அவுட்டான 'இரட்டையர்கள்'