ETV Bharat / sports

கிரிக்கெட்டின் பிதாமகனும், கடவுளும்..!

author img

By

Published : Feb 26, 2019, 4:33 AM IST

கிரிக்கெட்டின் பிதாமகன் என்றழைக்கப்படும் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் டான் பிராட்மேன் மறைந்து இன்றோடு 18 வருடங்கள் நிறைவடையும் தருணத்தில் அவருக்கும் - சச்சினுக்கும் நிகழ்ந்த சுவராஸ்யமான ஒற்றுமைகள் குறித்து சிறு தொகுப்பு.

கிரிக்கெட்டின் , பிதாமகன் என போற்றப்படும் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேன் 1908 ஆகஸ்ட் 27ஆம் தேதி பிறந்தார். இவரது பெயரை சொன்னாலே அவர் படைத்த பேட்டிங் சராசரி 99.94 சாதனை தான் நம் நினைவுக்கு வரும். இதனால் கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு இவரைப் பற்றி தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை .

தனது சிறப்பான பேட்டிங் மூலம் ஆஸ்திரேலிய அணி ஜாம்பவான் அணியாக திகழ இவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். 1928 முதல் 1948 வரை 52 டெஸ்ட் போட்டிகளில் 6996 ரன்களை குவித்துள்ளார். அதில் 12 இரட்டை சதம் விளாசி சாதனையையும் படைத்துள்ளார். இவருக்கும் இந்திய ஜாம்பவான் வீரர் சச்சினுக்கும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி கிரிக்கெட்டில் மறக்கமுடியாத நாள் என்றே கூறலாம்.

1948 ஆகஸ்ட் 14 ஆம் தேதி, டான் பிராட்மேன் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் நான்கு ரன்களை அடித்திருந்தால் டெஸ்ட் வரலாற்றில் 100 ரன்கள் என்ற சராசரியை எட்டியிருப்பார். ஆனால் அந்தப் போட்டியில் டான் பிராட்மேன் ரன் ஏதும் அடிக்கமால் ஆட்டமிழந்ததால் அவரது சராசரி 99.96 ஆக இருந்தது.

52 வருடங்களுக்குப் பிறகு அதே தேதியில் 1990 ஆம் ஆண்டில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். கிரிக்கெட் வரலாற்றில் டான் பிராட்மேன் சாதனையை (சராசரி 100 ) நழுவ விட்ட இந்த தேதியில் தான் சச்சின் தனது சதங்களின் கணக்கை தொடங்கினார்.

இதனால், கிரிக்கெட்டில் சச்சினை டான் பிராட்மேனின் மறுபிறவியாகவே ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் பார்த்தனர்.

இந்திய அணி 1998-99ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது டான் பிராட்மன் தனது 90வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸி வீரர் ஷேன் வார்னே ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

பின் அந்நிகழ்ச்சியில் பேசிய டான் பிராட்மேன்,

சச்சினின் ஆட்டத்தை பார்க்கும் போது களத்தில் என்னையே திரும்பி பார்கிற மாதிரி உள்ளது என உணர்ச்சிகரமாக கூறினார்.

அவர் கூறியது போலவே, கிரிக்கெட் வரலாற்றில் டான் பிராட்மனுக்கு பின் அதிகம் பேசபட்டவராக சச்சின் திகழ்ந்ததோடு மட்டுமின்றி, கிரிக்கெட்டின் கடவுள் என்ற பெயரையும் பெற்றார்.

கிரிக்கெட்டில் தனக்கென தனிபெயரை பெற்ற டான் பிராட்மேன் பிப்ரவரி 25, 2001 92 வயதில் உயிரிழந்தார். இன்றும் என்றும் கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது சராசரி சாதனையை எந்த வீரராலும் நெருங்க முடியாது .

undefined

Intro:Body:

news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.