கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி உள்ளார். சமீபத்தில் அவர் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அந்த பரிசோதனை முடிவில் அவருக்குத் தொற்று இருப்பது நேற்றிரவு (டிசம்பர் 28) உறுதியாகியுள்ளது.
கங்குலி, கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறை. இதற்குமுன், இந்தாண்டு ஜனவரி மாதத்தில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும், அவர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சிகிச்சைக்காக அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: Australia retain the Ashes: இன்னிங்ஸ் வெற்றி; ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது ஆஸி.,