டெல்லி : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க சீசனில் நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நடப்பு சீசனுக்கான லீக் ஆட்டங்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் டாப் இடங்களில் உள்ள அணிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டன. புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா 66.67 புள்ளிகளில் முதல் இடத்திலும், இந்தியா 58.80 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டுக்கு தகுதி பெறும். அதன் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் வரும் ஜுன் 7 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு 15 பேர் கொண்ட வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். ஏறத்தாழ 15 மாதங்களுக்குப் பிறகு அஜிங்ய ரஹானேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக ரஹானே, கே.எல் ராகுல் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பணி கே.எஸ் பரத்திடம் வழங்கப்பட்டு உள்ளது.
பார்டர் கவாஸ்கர் போட்டியில் சொதப்பியது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரன் குவிப்பில் ரஹானே ஜொலித்து வருகிறார். இந்திய டெஸ்ட் அணியிலும் அவர் ஜொலிப்பார் என நம்பப்படுகிறது.
அதேபோல் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட்டும் இந்திய அணியில் நீடிக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியுன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு பேட் கம்மின்ஸ் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு அந்த அணியில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் விவரம் வருமாறு..
-
🚨 NEWS 🚨#TeamIndia squad for ICC World Test Championship 2023 Final announced.
— BCCI (@BCCI) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details 🔽 #WTC23 https://t.co/sz7F5ByfiU pic.twitter.com/KIcH530rOL
">🚨 NEWS 🚨#TeamIndia squad for ICC World Test Championship 2023 Final announced.
— BCCI (@BCCI) April 25, 2023
Details 🔽 #WTC23 https://t.co/sz7F5ByfiU pic.twitter.com/KIcH530rOL🚨 NEWS 🚨#TeamIndia squad for ICC World Test Championship 2023 Final announced.
— BCCI (@BCCI) April 25, 2023
Details 🔽 #WTC23 https://t.co/sz7F5ByfiU pic.twitter.com/KIcH530rOL
இந்திய அணி : ரோகித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், புஜாரா, ரஹானே.
ஆஸ்திரேலிய அணி : பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேசல்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், உஸ்மான் கவாஜா, லபுசக்னே, லயன், மிட்ஷெல் மார்ஷ், மர்பி, ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
இதையும் படிங்க : DC VS SRH : டெல்லி அணி 2-வது வெற்றி! கடைசி இடத்தை தக்கவைக்க கடும் போராட்டம்!