ETV Bharat / sports

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ! - u19 asia cup india squad news in tamil

U19 Asia Cup 2023: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

bcci-announces-india-squad-for-u19-mens-asia-cup
U19 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
author img

By ANI

Published : Nov 26, 2023, 11:43 AM IST

டெல்லி: 19வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம், மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பி பிரிவிலும் உள்ளன.

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள், இறுதிப் போட்டிக்குத் தகுதி பொறும். ஆனால், அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகளால் இலங்கை கிரிக்கெட் அணியைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது, ஐசிசி. இதன் காரணமாக இலங்கை அணி ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக 1989 ஆம் ஆண்டு முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 9 தொடர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 8 முறை இந்திய அணியும், ஒரு முறை ஆப்கானிஸ்தான் அணியும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ U-19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.

U-19 இந்திய அணி: உதய் சஹாரன் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ர மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், ஆரவெல்லே அவனீஷ் ராவ், சௌமி குமார் பாண்டே (துணைக் கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஸ் மஹாஜன், தனுஷ் கௌதா, ஆரதயா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.

இதையும் படிங்க: மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா.. ஆல்ரவுண்டரை மிஸ் செய்யும் ஆர்சிபி - ஐபிஎல் அப்டேட்கள் இதோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.