ராய்ப்பூர் : ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெற்றது. தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
விசாகபட்டினத்தில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், அதைத் தொடர்ந்து நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் கொண்டு வந்தது.
-
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) December 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Australia win the toss and elect to bowl in Raipur.
Follow the Match ▶️ https://t.co/iGmZmBsSDt#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/GD0PhQIepF
">🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) December 1, 2023
Australia win the toss and elect to bowl in Raipur.
Follow the Match ▶️ https://t.co/iGmZmBsSDt#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/GD0PhQIepF🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) December 1, 2023
Australia win the toss and elect to bowl in Raipur.
Follow the Match ▶️ https://t.co/iGmZmBsSDt#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/GD0PhQIepF
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (டிச. 1) நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் முழு வீச்சில் செயல்ப்பட்டாலும் கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் கோட்டைவிட்டது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் திட்டத்தில் இந்திய அணி களமிறங்கும். அதேநேரம் தொடரில் நீடிக்க இந்திய அணியை வீழ்த்தும் திட்டத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :
இந்தியா : இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா.
-
A look at #TeamIndia’s Playing XI for the 4th T20I 👌🏻👌🏻
— BCCI (@BCCI) December 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Follow the Match ▶️ https://t.co/iGmZmBsSDt#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/DgHpRsNjyS
">A look at #TeamIndia’s Playing XI for the 4th T20I 👌🏻👌🏻
— BCCI (@BCCI) December 1, 2023
Follow the Match ▶️ https://t.co/iGmZmBsSDt#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/DgHpRsNjySA look at #TeamIndia’s Playing XI for the 4th T20I 👌🏻👌🏻
— BCCI (@BCCI) December 1, 2023
Follow the Match ▶️ https://t.co/iGmZmBsSDt#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/DgHpRsNjyS
ஆஸ்திரேலியா : மேத்யூ வேட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், ஆரோன் ஹார்டி, பென் மெக்டெர்மாட், டிம் டேவிட், கிறிஸ் கிரீன், பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், தன்வீர் சங்கா.
இதையும் படிங்க : உலகக் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்த விவகாரம் - மிட்செல் மார்ஷ் விளக்கம்!