சென்னை : இந்திய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டத்தியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, தர்மசாலா, புனே உள்ளிட்ட 10 நகரங்களில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம் ஆகிய 10 அணிகள் லீக் சுற்று ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற அணி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.