திருவனந்தபுரம் : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி தலா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடந்து முடிந்தது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டம் கடைசி பந்து வரை சென்ற நிலையில், அதில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு உள்ளார்.
-
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Australia elect to bowl in the 2nd T20I.
Follow the Match ▶️ https://t.co/nwYe5nO3pM#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/YlPPr0ppKK
">🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) November 26, 2023
Australia elect to bowl in the 2nd T20I.
Follow the Match ▶️ https://t.co/nwYe5nO3pM#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/YlPPr0ppKK🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) November 26, 2023
Australia elect to bowl in the 2nd T20I.
Follow the Match ▶️ https://t.co/nwYe5nO3pM#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/YlPPr0ppKK
இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பலமாக உள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ், தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் உள்ளிட்டோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர். அதேநேர, இந்திய அணியில் பந்துவீச்சு மிக வீக்காக உள்ளது. கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் 30 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.
இன்றைய ஆட்டத்தில் அந்த தவறுகளை இந்திய அணி தவிர்த்து வீறுநடை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியிலும் பந்துவீச்சு சற்று மோசமாகவே உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் சுமித், ஜோஷ் இங்கிலீஸ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.
வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
-
#TeamIndia remain unchanged for the 2nd T20I 👌👌
— BCCI (@BCCI) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Follow the Match ▶️ https://t.co/nwYe5nOBfk#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/qf4x9QWiqR
">#TeamIndia remain unchanged for the 2nd T20I 👌👌
— BCCI (@BCCI) November 26, 2023
Follow the Match ▶️ https://t.co/nwYe5nOBfk#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/qf4x9QWiqR#TeamIndia remain unchanged for the 2nd T20I 👌👌
— BCCI (@BCCI) November 26, 2023
Follow the Match ▶️ https://t.co/nwYe5nOBfk#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/qf4x9QWiqR
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :
இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா
-
2nd T20. India XI: R. Gaikwad, Y. Jaiswal, I. Kishan (Wk), S. Yadav (C), T. Varma, R. Singh, A. Patel, R. Bishnoi, A. Singh, M. Kumar, P. Krishna https://t.co/nwYe5nOBfk #INDvAUS @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2nd T20. India XI: R. Gaikwad, Y. Jaiswal, I. Kishan (Wk), S. Yadav (C), T. Varma, R. Singh, A. Patel, R. Bishnoi, A. Singh, M. Kumar, P. Krishna https://t.co/nwYe5nOBfk #INDvAUS @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) November 26, 20232nd T20. India XI: R. Gaikwad, Y. Jaiswal, I. Kishan (Wk), S. Yadav (C), T. Varma, R. Singh, A. Patel, R. Bishnoi, A. Singh, M. Kumar, P. Krishna https://t.co/nwYe5nOBfk #INDvAUS @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) November 26, 2023
ஆஸ்திரேலியா : ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா.
இதையும் படிங்க : "ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினால்.. அது தங்கம் மாதிரியானது" - ரவிச்சந்திரன் அஸ்வின்!