ETV Bharat / sports

Asia Cup 2023: இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு... ரிசர்வ் டே இருக்கா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 4:21 PM IST

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் மோதும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான்
India vs Pakistan

மும்பை: 16வது ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் முன்னேறியது. இதனையடுத்து அதன் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூப்பர் 4 சுற்றில் நாளை (செப்.09) வங்கதேசம் - இலங்கை அணி மோதுகின்றன. நாளை மறுநாள் இந்திய அணி பாகிஸ்தான் அணியை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் எதிர்கொள்கிறது. வரும் 10ம் தேதி கொழும்புவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பையில் தொடங்கியதில் இருந்தே போட்டியின் போது அடிக்கடி மழை குறிக்கிட்டு வருகிறது. இதனால் செப்டம்பர் 2ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி எவ்வித முடிவும் இன்றி ரத்தானது. அதனால் சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மழையால் பாதிக்கப்படுமோ என ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில், வரும் 10ம் தேதி நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால், 11ம் தேதி ( ரிசர்வ் டே ) மாற்று நாளில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மற்ற போட்டிகளுக்கு ரிசர்வ் டே கிடையாது என்றும் ஆசிய கோப்பையின் இறுதி போட்டிக்கு ரிசர்வ் டே இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் ஆஸ்திரேலிய வீரர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.