ETV Bharat / sports

"எனது கேப்டன்சியில் மாற்றத்தை கொண்டு வந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா" - ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி... - இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணி கேப்டன்

தனது கேப்டன்சியில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் ஆஷிஸ் நெஹ்ரா என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா
author img

By

Published : Jan 8, 2023, 1:40 PM IST

ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட இடைவெளிக்கு பின் பெரிய அளவில் கம்பேக் கொடுத்த வீரர்களில் முக்கிய இடம் வகிப்பவர் 20 ஓவர் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா. கிரிக்கெட் மீதான காதலால் பள்ளிக்கூட பையை தூக்கி வீசிவிட்டு கையில் கிரிக்கெட் மட்டையை எடுத்தவருக்கு அதன்பின் எல்லாம் வெற்றி தான்.

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் உள்ளது போல், இந்திய 20 ஓவர் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு நிலவும் பஞ்சத்தை போக்குவதற்கே என்றே வந்தவர் போல் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா திகழ்ந்தார். அசூர வேகம் மற்றும் அதிரடி ஆட்டம் உள்ளிட்ட நுணுக்கங்களால் எளிதில் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

வேகமாக உச்சம் தொடும் நபர் அதேவேகத்தில் கீழே இறங்க வேண்டியிருக்கும் என்ற நியதி ஹர்த்திக்கின் வாழ்கையிலும் பிரதிபலித்தது. மூட்டு பகுதியில் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், நீண்ட நாட்களுக்கு கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார்.

காயம் குணமான பின்னும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கான இடம் கேள்விக் குறியாகவே காணப்பட்டது. இந்த நிலையில் உள்ளுர் போட்டியில் அதிரடி ஆட்டத்தின் மூலம் தான் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டதை நிருபித்தார் ஹர்திக் பாண்டியா.

கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 2 அணிகள் அறிமுகமான நிலையில், அதில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். பெரியளவிலான அனுபவம் இல்லாதவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஹர்திக் பாண்டியா மீது பல்வேறு விமர்சன கனைகள் தொடுக்கப்பட்டன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஐ.பி.எல். கோப்பையக் கைப்பற்றி தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு ஹர்திக் பாண்டியா தக்க பதிலடி கொடுத்தார். ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு முன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஜ்கேப்டன்சியில் பெரிய அளவிலான அனுபவம் கிடையாது.

ஐ.பி.எல். தொடருக்கு முன் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடியது மட்டுமே அவரது திறன் மேம்பாட்டிற்கான அனுபவமாக கருதப்பட்டது. அதையும் தாண்டி ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

இந்நிலையில், தனது கேப்டன்சியில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தவர் ஆஷிஸ் நெஹ்ரா என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இலங்கை டி20 தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன் பேசிய ஹர்திக் பாண்டியா, "ஐ.பி.எல் தொடரில் நான் விளையாடிய குஜராத் அணியின் பார்வையில் இருந்து பார்க்கும் போது எந்த மாதிரியான பயிற்சியாளருடன் நான் பணியாற்றினேன் என்பது மிகவும் முக்கியமானது என்றார்.

ஆஷிஷ் நெஹ்ரா எனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், அதற்கு காரணம் இருவரின் மனநிலைதான் என்று தெரிவித்தார். நாங்கள் இரண்டு பேரும் பேட்டிங், பந்துவீச்சு என வெவ்வேறு ஆளுமைகளை கொண்டிருந்தாலும், எங்களிடம் ஒரே மாதிரியான கிரிக்கெட் எண்ணங்கள் இருந்ததாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரிஷப் பந்துக்கு தசை நார் அறுவை சிகிச்சை; தொடர் மருத்துவக் கண்காணிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.