ஐதராபாத் : நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா சிறப்பாக பந்துவீசி வருவதாகவும், வெள்ளை நிறப் பந்து வடிவ கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடியவர் என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் புகழாரம் சூடி உள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது உலக கிரிக்கெட் தொடரில் நல்ல பார்மில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா இதுவரை 19 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக உள்ளார். ஆஸ்திரேலியா அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் ஆடம் ஜம்பா குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆட்டத்திலும் 3 விக்கெட்டுகளையாவது வீழ்த்தி உள்ளார்.
இந்நிலையில், நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடம் ஜம்பா சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பேட்ஸ்மேன்களின் எண்ணங்களை படித்து அதற்கு ஏற்ற வகையில் விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடிய திறன் ஜாம்பாவிடம் இருப்பதாகவும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் பிஞ்ச் தெரிவித்து உள்ளார்.
வெள்ளை பந்து பார்மட்டுகளில் ஆடம் ஜம்பா சிறப்பாக செயல்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக ஆரோன் பிஞ்ச் தெரிவித்து உள்ளார். சில சமயங்களில், தனிநபர் அல்லது அணிக்கு எதிராக விளையாடும் போது திறமை வெளிக் கொணர முடியும் என்றும் ஆடம் ஜம்பாவின் நிலைத் தன்மை நம்ப முடியாத அளவில் உள்ளதாகவும் ஆரோன் பிஞ்ச் தெரிவித்து உள்ளார்.
ஆடம் ஜாம்பா ஒருநாள் மற்றும் டி20 வெள்ளை நிற பந்து பார்மட்களில் பொருத்தமாக பந்துவீசக் கூடியவர் என்றும் அவரது திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்றும் ஆரோன் பிஞ்ச் தெரிவித்து உள்ளார். கடந்த நவம்பர் 4ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய ஆடம் ஜம்பா 12வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், மொயின் அலி என மூன்று முக்கிய தூண்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்தார்.
அன்றைய ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசிய ஆடம் ஜம்பா 21 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
இதையும் படிங்க : வங்கதேச அணியில் இனி இவருக்கு பதில் இவர்..!