லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (ஆக. 15) நடைபெற்று வருகிறது.
லண்டனில் மூவர்ணக் கொடி
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செய்துள்ளனர்.
கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்தியக் கொடியை ஏற்றி, இந்திய அணியினர் இந்திய தேசிய கீதத்தைப் பாடும் காணொலியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
-
On the occasion of India's Independence Day, #TeamIndia members came together to hoist the flag 🇮🇳 🙌 pic.twitter.com/TuypNY5hjU
— BCCI (@BCCI) August 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On the occasion of India's Independence Day, #TeamIndia members came together to hoist the flag 🇮🇳 🙌 pic.twitter.com/TuypNY5hjU
— BCCI (@BCCI) August 15, 2021On the occasion of India's Independence Day, #TeamIndia members came together to hoist the flag 🇮🇳 🙌 pic.twitter.com/TuypNY5hjU
— BCCI (@BCCI) August 15, 2021
மோடி உரை
முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் மோடி, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி, தனது உரையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 391 ரன்களைக் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றதை அடுத்து, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: LORDS TEST: இங்கிலாந்து ஆல்-அவுட்; ரூட் 180 நாட்-அவுட்