ETV Bharat / sports

இந்தியா - ஆஸ்திரேலியா உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம்! 30 கோடி ரசிகர்கள் தொலைக்காட்சியில் பார்த்து சாதனை!

ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியை தொலைக்காட்சி வாயிலாக 30 கோடி ரசிகர்கள் கண்டு கழித்துள்ளனர்.

30 crore fans watched the cricket world cup 2023 Final

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 9:23 PM IST

ஹைதராபாத்: ஐசிசி நடத்திய 13வது உலகக் கோப்பை கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றது.

இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் இருந்து உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலியாவும் முன்னேற, இந்த போட்டியானது கடந்த 19ஆம் தேதி உலகின் அதிக பார்வையாளர்கள் அமரக்கூடிய அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை வென்றது. இந்த இறுதி போட்டி உள்பட, நடைபெற்ற 48 போட்டிகளை சுமார் 12.5 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளனர்.

இது உலக சாதனையாக மாறியது. இந்நிலையில், உலகக் கோப்பை இறுதி போட்டியை மட்டும் தொலைகாட்சியில் 30 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். இது இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் ஒர் புதிய சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, "2023 உலகக் கோப்பை இறுதி போட்டியை 30 கோடி ரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக கண்டு களித்துள்ளனர்.

  • A staggering 30 Crore fans watched the @cricketworldcup 2023 Final on TV making it the most watched event of any kind in Indian television history. Peak TV Concurrency also reached a historic high of 13 Crore (peak digital concurrency was 5.9 Crore, also a world record).
    We are… pic.twitter.com/v5YCp0l04D

    — Jay Shah (@JayShah) November 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் எந்த வகையிலும் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்வாக அமைந்துள்ளது. பீக் டிவி கன்கரன்சி 13 கோடி என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. நமது கிரிக்கெட் விளையாட்டின் மீது இந்திய ரசிகர்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் ஆர்வத்தால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நீல நிறத்தால் இரத்தம் சிந்திய அனைவருக்கும் நன்றி" என்றார்.

இதையும் படிங்க: அர்ஜென்டினா ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி... மெஸ்ஸி செய்த தரமான சம்பவம்... என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.