ETV Bharat / sports

இங்கிலாந்தை அணியை துவம்சம் செய்த நியூசிலாந்து அணி.. 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி! - England Vs New Zealand Live

Cricket
Cricket
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 1:37 PM IST

Updated : Oct 5, 2023, 9:47 PM IST

20:39 October 05

England VS New Zealand:நியூசிலாந்து அணி வெற்றி!

நடப்பு சாம்பினான இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நியூசிலாந்து அணி, 36.2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று உள்ளது.

20:25 October 05

England VS New Zealand : நியூசிலாந்துக்கு இன்னும் 38 ரன்கள் தேவை!

நியூசிலாந்து அணி வெற்றி பெற 16 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

20:13 October 05

England VS New Zealand : ரவீந்திரா சதம்!

உலக கோப்பையின் அறிமுக போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசியுள்ளார்.

19:54 October 05

England VS New Zealand : சதம் விளாசினார் கான்வே!

அதிரடியாக விளையாடி வரும் கான்வே சதம் விளாசி உள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 5வது சதத்தை நிறைவு செய்துள்ளார்.

19:31 October 05

England VS New Zealand : இலக்கை நோக்கி வேகமாக நகரும் நியூசிலாந்து அணி!

20 ஓவர்களில் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்துள்ளது.

19:11 October 05

England VS New Zealand : அதிரடி காட்டும் நியூசிலாந்து!

நாலாப்பக்கமும் பந்துகளை சிதறடித்து அதிரடி காட்டி வருகிறது நியூசிலாந்து அணி. 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்துள்ளது.

19:08 October 05

England VS New Zealand : கான்வே அரைசதம்!

தொடக்கம் முதலே அதிரடி காட்டி வரும் டெவோன் கான்வே 37 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்துள்ளார்.

18:32 October 05

England VS New Zealand : தொடர்ந்து மெய்டன் ஓவர்களை வீசிய சாம் கர்ரன்!

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் சாம் கர்ரன் 2வது மற்றும் 4வது ஓவரை வீசினார். அவர் வீசிய இரண்டு ஓவரையுமே மெய்டன் ஓவராக வீசி அசத்தியுள்ளார். இதில் அவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

18:12 October 05

England VS New Zealand : வில் யங் டக் அவுட்!

சாம் கர்ரன் பந்து வீச்சில் வில் யங் டக் அவுட் ஆகியுள்ளார்.

18:05 October 05

England VS New Zealand : களம் இறங்கியது நியூசிலாந்து அணி!

283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கி உள்ளது. தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் விளையாடி வருகின்றனர். முதல் ஓவர் முடிவில் 10 ரன்கள் சேர்த்துள்ளது.

17:33 October 05

England VS New Zealand : நியூசிலாந்துக்கு 283 ரன்கள் இலக்கு!

50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி வெற்றி பெற 50 ஓவர்களில் 283 எடுக்க வேண்டும்.

17:19 October 05

England VS New Zealand : இங்கிலாந்து சோகம்!

இங்கிலாந்து அணி 46 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து உள்ளது. அடில் ரசீத் 3 ரன்களுடனும், மார்க் வுட் 1 ரன்னுடம் களத்தில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

17:17 October 05

England VS New Zealand : சாம் கரண் அவுட்!

இங்கிலாந்து வீரர் சாம் கரண் (14 ரன்) ஆட்டமிழந்தார். அணியின் கடைசி கட்ட நம்பிக்கையாக திகழ்ந்த சாம் கரண் 14 ரன்களில் மேட் ஹென்ரி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

17:14 October 05

England VS New Zealand : 250 ரன்களை கடந்த இங்கிலாந்து!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 250 ரன்களை கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறது. 45 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 250 ரன்கள் கடந்து விளையாடி வருகிறது. சாம் கரண் (14 ரன்), அடில் ரசீத் (0 ரன்) விளையாடி வருகின்றனர்.

17:12 October 05

England VS New Zealand : கிறிஸ் வோக்ஸ் அவுட்!

இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 45 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 250 ரன்கள் குவித்து உள்ளது.

17:03 October 05

England VS New Zealand : தட்டுத் தருமாறும் இங்கிலாந்து!

42 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

16:59 October 05

England VS New Zealand : களம் புகுந்த கிறிஸ் வோக்ஸ்!

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் (77 ரன்க்) கிளைன் பிலிப்ஸ் பந்துவீச்சில் போல்ட்டாகி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் களமிறங்கி உள்ளார்.

16:57 October 05

England VS New Zealand : ரூட் அவுட்!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோ ரூட் (77 ரன்) போல்ட்டாகி ஆட்டமிழந்தார்.

16:50 October 05

England VS New Zealand : இங்கிலாந்து அணி தடுமாற்றம்!

39 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்து உள்ளது. ஜோ ரூட் 72 ரன்களுடனும், சான் கரண் (0 ரன்) விளையாடி வருகின்றனர்.

16:49 October 05

England VS New Zealand : களம் புகுந்த கரன்!

இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் (20 ரன்) ஆட்டமிழந்த நிலையில், அடுத்த வீரராக சாம் கரன் களமிறங்கி உள்ளார். அவருடன் ஜோ ரூட் (72 ரன்) விளையாடி வருகிறார்.

16:47 October 05

England VS New Zealand : லியாம் லிவிங்ஸ்டோன் கேட்ச்

இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் கேட்ச்சாகி வெளியேறினார். 20 ரன்கள் எடுத்திருந்த லியாம் லிவிங்ஸ்டோன், டிரென்ட் பவுல்ட் வீசிய பந்தை தூக்கி அடித்த போது எல்லைக் கோட்டுக்கு அருகே இருந்த மேட் ஹென்ரியிடம் கேட்ச்சாகி வெளியேறினார்.

16:39 October 05

England VS New Zealand : 200 ரன்களை கடந்த இங்கிலாந்து!

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறது. 37 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 214 ரன்கள் குவித்து உள்ளது. ஜோ ரூட் 71 ரன்களுடனும், லியாம் லிவிங்ஸ்டோன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

16:27 October 05

England VS New Zealand : லியாம் லிவிங்ஸ்டோன் ஆன் ஸ்டிரைக்!

ஜாஸ் பட்லர் அவுட்டானதை தொடர்ந்து இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் களமிறங்கி உள்ளார். அவருடன் ஜோ ரூட் (60 ரன்) விளையாடி வருகிறார்.

16:24 October 05

England VS New Zealand : 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து!

உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 33 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 188 ரன்கள் குவித்து உள்ளது.

16:21 October 05

England VS New Zealand : பட்லர் அவுட்!

இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் ஆட்டமிழந்தார். மேட் ஹென்ரி வீசிய பந்தில் ஜாஸ் பட்லர் (43 ரன்) விக்கெட் கீப்பர் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

16:20 October 05

England VS New Zealand : 30 பந்துக்கு 33 ரன்!

கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்து உள்ளது. ரன் ரேட் 6.20 என்ற கணக்கில் உள்ளது.

16:09 October 05

England VS New Zealand : பார்ட்னர்ஷிப்பில் அரைசதம்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் - ஜாஸ் பட்லர் ஜோடி அரை சதம் பார்ட்னர்ஷிப் கடந்தது. 55 பந்துகளில் 50 ரன்களை கடந்து இந்த ஜோடி தொடர்ந்து விளையாடி வருகிறது.

16:05 October 05

England VS New Zealand : ஜோ ரூட் அரைசதம்!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் கடந்தார். 57 பந்துகளில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.

16:01 October 05

England VS New Zealand : அபார சிக்சர்!

நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் வீசிய பந்தை இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் சிக்சருக்கு பறக்க விட்டு குழுமியிருந்த இங்கிலாந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

15:55 October 05

England VS New Zealand : 150 ரன்களை கடந்த இங்கிலாந்து அணி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 150 ரன்களை கடந்தது. 27 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்து உள்ளது.

15:52 October 05

England VS New Zealand : அடுத்தடுத்து வீழ்ந்த இங்கிலாந்து விக்கெட்டுகள்!

நிலைத்து நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து வீரர்கள் நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஜானி பேர்ஸ்டொவ் (33 ரன்), டேவிட் மலான் (14 ரன்) ஹாரி ப்ரூக் (25 ரன்), மொயின் அலி (11 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

15:46 October 05

England VS New Zealand : இங்கிலாந்து நிதான ஆட்டம்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 25 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து உள்ளது. ஜோ ரூட் 44 ரன்களுடனும், கேப்டன் ஜாஸ் பட்லர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

15:37 October 05

England VS New Zealand : இங்கிலாந்து அணி திணறல்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி திணறி வருகிறது. 22 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்து உள்ளது.

14:17 October 05

England VS New Zealand : இங்கிலாந்து 21 ரன்

அகமதாபாத் : 4 ஓவர்கள் இங்கிலாந்து அணி 21 ரன்கள் குவித்து உள்ளது. தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் 12 ரன்களுடன் டேவிட் மலான் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

13:39 October 05

England VS New Zealand : வீரர்கள் விபரம்!

இங்கிலாந்து : ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் குர்ரான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்.

நியூசிலாந்து : டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிரெண்ட் போல்ட்.

09:47 October 05

LIVE : World Cup Cricket 2023 : இங்கிலாந்து Vs நியூசிலாந்து உலக கோப்பை கிரிக்கெட்!

அகமதாபாத் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Last Updated : Oct 5, 2023, 9:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.