டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா, மாரடைப்பு காரணமாக டெல்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) காலமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மாவுக்கு இன்று காலை 7.40 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
66 வயதான யாஷ்பால் சர்மா 1978ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். அப்போது அவர் 26 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமானார். வலக்கை ஆட்டக்காரரான யாஷ்பால் சர்மா, 37 டெஸ்ட் மற்றும் 42 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி முறையே 1,606 மற்றும் 883 ரன்கள் எடுத்துள்ளார்.
1983ஆம் ஆண்டு இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இறுதி ஆட்டத்தில் 11 ரன்கள் எடுத்திருந்தார். இவர் கடைசியாக 1985ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஆடியிருந்தார்.
இதையும் படிங்க : 1000 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன்!