கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறும் முதல் பேட்மிண்டன் தொடரான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன், இன்று (ஜனவரி 12) தொடங்கியது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை எதிர்கொண்டார்.
74 நிமிடங்கள் பரபரப்பாக நீடித்த இப்போட்டியில் பிவி சிந்து 21-16, 24-26, 13-21 என்ற செட் கணக்கில் மியா பிளிச்ஃபெல்ட்டிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.
அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத், தாய்லாந்தின் காந்தஃபோன் வாங்சரோனை எதிர்கொன்டார்.
இப்போட்டியின் முடிவில் சாய் பிரனீத் 16-21 10-21 என்ற நேர் செட் கணக்கில் காந்தஃபோன் வாங்சரோனிடம் தோல்வியைத் தழுவி, முதல் சுற்றுடன் நடையைக் கட்டினார்.
முன்னதாக, இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர்கள் சாய்னா நேவால், பிரனாய் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இத்தொடரிலிருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாய்லாந்து ஓபன்: சாய்னா நேவால், பிரனாய்க்கு கரோனா