பாங்காக்கில் நடைபெற்றுவரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (ஜன.22) நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை - மலேசியாவின் பெங் சூன் சான், லி யிங் கோச் இணையை எதிர்கொண்டது.
இப்போட்டியின் முதல் செட்டை பெங் சூன் இணை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி அஸ்வினி பொன்னப்பா இணைக்கு அதிர்ச்சியளித்தது. இதையடுத்து இரண்டாவது செட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வினி இணை 24-22 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி தோல்வியை தவிர்த்தது.
தொடர்ந்து மூன்றாவது செட் ஆட்டத்திலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 22-20 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் போராடி வெற்றி பெற்றது.
-
TOYOTA Thailand Open
— BWFScore (@BWFScore) January 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
XD - Quarter final
🇮🇳Satwiksairaj RANKIREDDY🏅
18 24 22 🇮🇳Ashwini PONNAPPA🏅
21 22 20 🇲🇾Peng Soon CHAN
🇲🇾Liu Ying GOH
🕗 in 75 minutes
https://t.co/kav5PQL0s6
">TOYOTA Thailand Open
— BWFScore (@BWFScore) January 22, 2021
XD - Quarter final
🇮🇳Satwiksairaj RANKIREDDY🏅
18 24 22 🇮🇳Ashwini PONNAPPA🏅
21 22 20 🇲🇾Peng Soon CHAN
🇲🇾Liu Ying GOH
🕗 in 75 minutes
https://t.co/kav5PQL0s6TOYOTA Thailand Open
— BWFScore (@BWFScore) January 22, 2021
XD - Quarter final
🇮🇳Satwiksairaj RANKIREDDY🏅
18 24 22 🇮🇳Ashwini PONNAPPA🏅
21 22 20 🇲🇾Peng Soon CHAN
🇲🇾Liu Ying GOH
🕗 in 75 minutes
https://t.co/kav5PQL0s6
இதன் மூலம் இந்தியாவின் அஸ்வினி, ரங்கிரெட்டி இணை 18-21, 24-22, 22-20 என்ற செட் கணக்கில் மலேசியாவின் பெங் சூன் சான், லி யிங் கோச் இணையை வீழ்த்தி தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் கலப்பு இரட்டையர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: ‘பாகிஸ்தானில் பாதுகாப்பாக உணர்கிறோம்’ - பாப் டூ பிளஸிஸ்