தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சாய் பிரனீத் பங்கேற்றிருந்தார். இதில், இன்று (ஜனவரி 20) நடைபெற இருந்த ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் மலேசியாவின் லீக் டேரனை எதிர்கொள்ளவிருந்தார்.
முன்னதாக, நேற்று (ஜன.19) சாய் பிரனீத்திற்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதையடுத்து, சாய் பிரனீத் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து, தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
-
🚨 BREAKING 🚨
— BWF (@bwfmedia) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
An athlete has tested positive for #COVID19 at the #ToyotaThailandOpen https://t.co/JZt56ufOqQ
">🚨 BREAKING 🚨
— BWF (@bwfmedia) January 19, 2021
An athlete has tested positive for #COVID19 at the #ToyotaThailandOpen https://t.co/JZt56ufOqQ🚨 BREAKING 🚨
— BWF (@bwfmedia) January 19, 2021
An athlete has tested positive for #COVID19 at the #ToyotaThailandOpen https://t.co/JZt56ufOqQ
மேலும், சாய் பிரனீத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும், தன்னை தனிமைப்படுத்தி கொண்டதன் காரணமாக, இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி; வெர்மா வெற்றி!