ETV Bharat / sports

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் தோல்வியடைந்த சாய்னா

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.

saina nehwal
saina nehwal
author img

By

Published : Feb 22, 2020, 12:26 PM IST

பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் (18ஆவது ரேங்க்) - தாய்லாந்தின் புசானன் ஒங்பம்ரங்பான் (13ஆவது ரேங்க்) ஆகியோர் மோதினர்.

இப்போட்டியின் தொடக்கத்தில் 3-2 என முன்னிலை வகித்த சாய்னா, பின்னர் தாய்லாந்து வீராங்கனையின் அபார ஆட்டத்தால் அவரிடம் சரணடைந்தார். 45 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சாய்னா 20-22, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்.

இதே போன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தாய்லாந்து வீரர் குன்லாவுத் விதித்சார்னிடம் 21-17, 17-21, 12-21 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் சமீர் வர்மா தோல்வியுற்றார். மற்றொரு காலிறுதியில் ஃபிரான்ஸ் வீரர் தாமஸ் ரூக்செல்லை 21-14, 21-15 என நேர் செட்களில் வீழ்த்திய இந்திய வீரர் அஜய் ஜெயராம் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இதையும் பாருங்க: சில்லுக்கருப்பட்டி பட நிவேதாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.