நடப்பு ஆண்டிற்கான ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, துருக்கியின் நெஸ்லிஹான் யிசிட்டுடன் (Neslihan Yiğit) மோதினார்.
பரபரப்பான இப்போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சிந்து முதல் செட்டை 21-16 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-19 என்ற கணக்கிலும் கைப்பற்றி யிசிட்டுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் பிவி சிந்து 21-16, 21-19 என்ற நேர் செட் கணக்கில் நெஸ்லிஹான் யிசிட்டை வீழ்த்தி ஸ்விஸ் ஓபன் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
இதையும் படிங்க: கத்தார் ஓபன்: அரையிறுதிச்சுற்றில் சானியா இணை!