ETV Bharat / sports

அஸ்தானா ஓபன்: காலிறுதிச்சுற்றில் ஷரண் இணை தோல்வி!

அஸ்தானா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திவிஜ் ஷரண், இங்கிலாந்தின் லூக் பாம்ப்ரிட்ஜ் இணை தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Sharan, Bopanna knocked out of Astana Open

author img

By

Published : Oct 29, 2020, 10:19 PM IST

Updated : Oct 29, 2020, 10:25 PM IST

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் அஸ்தானா ஓபன் 2020 டென்னிஸ் தொடர் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.29) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திவிஜ் ஷரண் - லூக் பாம்ப்ரிட்ஜ் இணை, ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல், லூக் சாவில் இணையுடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பர்செல் இணை முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட பர்செல் இணை 7-5 என்ற கணக்கில் அதனையும் கைப்பற்றி ஷரண் இணைக்கு அதிர்ச்சியளித்தது.

இதன் மூலம் அஸ்தான ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் ஷரண் இணை 3-6, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் பர்செல் இணையிடம் தோல்வியடைத்து, தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க:சார்லார்லக்ஸ் ஓபன் தொடரிலிருந்து இந்திய அணி விலகல்!

Last Updated : Oct 29, 2020, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.