ETV Bharat / sports

சுவிஸ் ஓபன்: அரையிறுதிச் சுற்றில் இந்திய இணை!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை முன்னேறியது.

Rankireddy-Shetty enter men's doubles semis of Swiss Open

author img

By

Published : Mar 6, 2021, 10:45 AM IST

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று (மார்ச் 5) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை - மலேசியாவின் ஆங் யூ சின், தியோ ஈ யி இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இப்போட்டியின் முதல் செட்டை ஆங் யூ சின் இணை 21- 12 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரங்கிரெட்டி இணை 21-19 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றி ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ரங்கிரெட்டி இணை 21-12 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி ஆங் யூ சின் இணைக்கு அதிர்ச்சியளித்தது.

இதன்மூலம் இந்திய இணை 12-21, 21-19, 21-12 என்ற செட் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தி, சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இதையும் படிங்க: டி20: ஃபின்ச் அதிரடியில் தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.