ETV Bharat / sports

இரண்டாம் சுற்றில் சாய்னா, சிந்து! - சமீர் வர்மா

வுஹான்: ஆசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனைகளான பி.வி. சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இரண்டாம் சுற்றில் சாய்னா, சிந்து!
author img

By

Published : Apr 24, 2019, 5:49 PM IST

Updated : Apr 24, 2019, 7:57 PM IST

மகளிர் ஒற்றையர் பிரிவு:

சீனாவின் வுஹான் நகரில் ஆசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பானின் டகாஷி சயகாவை (Takahashi Sayaka) எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-14, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் நடைபெற்ற மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 12-21, 21-11, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹன் யூவை (Han yue) போராடி வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சாய்னா நேவால் இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு:

இதைத்தொடர்ந்து, ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஷேசர் ஹைரென் ரூஸ்டாவிட்டோவிடம் (Shesar Hiren Rhustavito) தோல்வி அடைந்தார்.

இதேபோல் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், இந்திய வீரர் சமீர் வர்மா 21-13, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானைச் சேர்ந்த சகாய் கசமுஸாவை (sakai Kasamuza) தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் இரட்டையர் பிரிவு:

மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மேகனா-பூர்விஷா ஜோடி 13-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் ஜோங்கோல்பான்-ரவிண்டா (Jongkolphan - Rawinda )இணையிடம் சரண் அடைந்தது.

ஆடவர் இரட்டையர் பிரிவு:

ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன்-ராமசந்திரன் இணை, 18-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஹெ ஜித்திங் - டன் ஹுயிங் (He Jiting - Tan Qiang)ஜோடியிடம் வீழ்ந்தது.

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 24, 2019, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.