ETV Bharat / sports

பேட்மிண்டன்: அரையிறுதில் பி.வி சிந்து, காஷ்யப் தோல்வி!

author img

By

Published : Mar 30, 2019, 9:40 PM IST

டெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி சிந்து, இந்திய வீரர் காஷ்யப் ஆகியோர் அரையிறுதி ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர்.

அரையிறுதில் பி.வி சிந்து, காஷ்யப் தோல்வி

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், இந்திய வீரர் பருபலி காஷ்யப், டென்மார்கின் விக்டார் அக்செல்சென்யை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், காஷ்யப் 11-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து, மகளிருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து, சீனாவின் பிங்கஜியாவுடன் மோதினார்.

முதல் செட்டில் கடுமையாக போராடிய பி.வி சிந்து 21-23 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து, இரண்டாவது செட்டில் எழுச்சி பெறுவார் என்று மிகுந்த எதிர்பார்புடன் இருந்த ரசிகர்களுக்கு பி.வி சிந்து ஏமாற்றத்தை மட்டுமே அளித்தார்.

இரண்டாவது செட் போட்டியிலும் அவர் 18-21 என்ற வித்தியாசத்தில் சீன வீராங்கனை பிங்கஜியாவிடம் வீழ்ந்தார். இதன் மூலம், 21-23, 18-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி சிந்து தோல்வி அடைந்து இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவவிட்டார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.