கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர், கொரிய நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகச்சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் ஜாங் பீவனை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த போட்டியில் சிந்து முதல் செட்டை 21-07 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். அதன் பின் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் பீவான் இரண்டாவது, மூன்றாவது செட்டை 24-22, 21-15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் சிந்துவை வீழ்த்தினார்.
-
Badminton: P.V. Sindhu knocked out of Korea Open in the first round of women's singles as she loses 21-7, 22-24, 15-21 to Zhang Beiwen of America. #KoreaOpenSuper500 pic.twitter.com/PsRBwBppiI
— Doordarshan Sports (@ddsportschannel) September 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Badminton: P.V. Sindhu knocked out of Korea Open in the first round of women's singles as she loses 21-7, 22-24, 15-21 to Zhang Beiwen of America. #KoreaOpenSuper500 pic.twitter.com/PsRBwBppiI
— Doordarshan Sports (@ddsportschannel) September 25, 2019Badminton: P.V. Sindhu knocked out of Korea Open in the first round of women's singles as she loses 21-7, 22-24, 15-21 to Zhang Beiwen of America. #KoreaOpenSuper500 pic.twitter.com/PsRBwBppiI
— Doordarshan Sports (@ddsportschannel) September 25, 2019
இதன் மூலம் சீனாவின் ஜான் பீவான் 07-21, 24-22, 21-15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் பி.வி.சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இத்தோல்வியின் மூலம் உலகச்சாம்பியன் பி.வி.சிந்து கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்துள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் கொரியாவின் கிம் கா யூனை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் முதல் செட்டை 21-19 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றினார். அதன் பின் தனது திறமையை வெளிப்படுத்திய கிம் கா யூன் இரண்டாவது செட்டை 21-18 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 8-1 என்ற கணக்கிலும் கைப்பற்றினார்.
-
Badminton: Saina Nehwal exits Korea Open in the first round after retiring hurt 21-19, 18-21, 1-8 against Korea's Kim Ga Eun#KoreaOpenSuper500 pic.twitter.com/ehVQxAidHf
— Doordarshan Sports (@ddsportschannel) September 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Badminton: Saina Nehwal exits Korea Open in the first round after retiring hurt 21-19, 18-21, 1-8 against Korea's Kim Ga Eun#KoreaOpenSuper500 pic.twitter.com/ehVQxAidHf
— Doordarshan Sports (@ddsportschannel) September 25, 2019Badminton: Saina Nehwal exits Korea Open in the first round after retiring hurt 21-19, 18-21, 1-8 against Korea's Kim Ga Eun#KoreaOpenSuper500 pic.twitter.com/ehVQxAidHf
— Doordarshan Sports (@ddsportschannel) September 25, 2019
இதன் மூலம் கொரியாவின் கிம் கா யூன் 19-21, 21-18, 8-1 என்ற புள்ளிகளின் அடிப்படையில் சாய்னா நேவலை வெளியேற்றினார். இந்தியாவின் சாய்னா நேவால் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரிலும் முதல் சுற்றிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.