சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது அந்நாட்டின் சாங்ஸௌ (Changzhou) நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் ஸ்பேனிஷ் நாட்டின் நட்சத்திர வீராங்கனை கரோலினா மரின் சீனாவின் ஹி பிங்ஜியாவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த அட்டத்தில் அதிரடியாக விளையாடிய பிங்ஜியாவ் முதல் செட் கணக்கை 21- 11 என்ற புள்ளிகள் அடிப்படையில் கரோலினாவுக்கு ஷாக் அளித்தார். அதனைத் தொடர்ந்து சூதாரித்து விளையாடிய கரோலினா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது செட்டை 21-14 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.
அதனைத்தொடர்ந்து சிறாப்பாக விளையாடிய கரோலினா மூன்றாவது செட்டையும் 21 - 15 என்ற புள்ளிக்கணக்கில் பிங்ஜியாவிடமிருந்து கைப்பற்றினார். இதன் மூலம் சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் கரோலினா மரின் 11-21, 21-14, 21-15 என்ற செட்கணக்கில் ஹி பிங்ஜியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
-
Highlights | Carolina Marin 🇪🇸 hitting her targets in this great quarterfinal matchup against He Bing Jiao 🇨🇳#HSBCBWFbadminton #HSBCRaceToGuangzhou pic.twitter.com/gYtMraYS9r
— BWF (@bwfmedia) September 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Highlights | Carolina Marin 🇪🇸 hitting her targets in this great quarterfinal matchup against He Bing Jiao 🇨🇳#HSBCBWFbadminton #HSBCRaceToGuangzhou pic.twitter.com/gYtMraYS9r
— BWF (@bwfmedia) September 20, 2019Highlights | Carolina Marin 🇪🇸 hitting her targets in this great quarterfinal matchup against He Bing Jiao 🇨🇳#HSBCBWFbadminton #HSBCRaceToGuangzhou pic.twitter.com/gYtMraYS9r
— BWF (@bwfmedia) September 20, 2019
நாளை நடைபெறவுள்ள மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ஸ்பேனிஷின் கரோலினா மரின் ஜப்பானின் சாயகா தகாஹஷியை எதிர்கொள்கிறார்.